'தனுஷுடன் நடிப்பது பெருமை'

'தனுஷுடன் நடிப்பது பெருமை'

3 mins read
1ee7ce62-44eb-4f5e-b4c7-c8aaba8edb1e
-

தனு­ஷு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்புக் கிடைக்­கும் என தாம் எதிர்­பார்க்­கவே இல்லை என்­கி­றார் சம்­யுக்தா மேனன்.

'களரி', 'ஜூலைக் காற்­றில்' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்­களில் நடித்த இவர், இப்­போது தனுஷ் நடிக்­கும் 'வாத்தி' படத்­தின் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் மீண்­டும் கால்­பதித்­துள்­ளார்.

"தமி­ழில் நல்ல தொடக்­கம் அமைந்­தது. ஆனா­லும் எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் ஏதும் சரி­வர அமை­ய­வில்லை.

"முன்­னேறி வரும் நடி­கர், நடி­கை­க­ளைக் கொண்டு குறைந்த செல­வில் எடுக்­கப்­படும் படங்­கள், முற்­றி­லும் புதி­தாக, வித்­தி­யா­ச­மாக இல்லை என்­றால் ரசி­கர்­க­ளின் கவ­னத்தை ஈர்க்க முடி­வ­தில்லை. நான் நடித்த முதல் இரண்டு தமிழ்ப் படங்­க­ளுக்­கும் அது­தான் நடந்­தது.

"அப்­ப­டங்­களின் தோல்வி மிகுந்த வருத்­தத்தை தந்தது. அதன் பிறகு பிற மொழிப் படங்­களில் கவனம் செலுத்­தத் தொடங்­கி­னேன்.

"இப்­போது கட­வு­ளுக்கு நன்றி சொல்­கிறேன். இரண்டு முறை சிறந்த நடி­க­ருக்­கான தேசிய விருது பெற்ற­வர் தனுஷ். அவ­ரு­டன் இணைந்து நடிப்­ப­தில் பெரு­மைப்­ப­டு­கி­றேன். 'வாத்தி' கதை அவ­ரது திற­மைக்கு ஏற்ற கதை. எனக்­கும் நல்ல கதா­பாத்­தி­ரம் அமைந்­துள்­ளது. இதை மட்­டுமே என்­னால் இப்­போது சொல்ல முடி­யும்," என்கிறார் சம்­யுக்தா.

பாலக்­காட்­டில் பிறந்து வளர்ந்­தா­லும் சம்­யுக்­தா­வால் தமி­ழில் சர­ள­மா­கப் பேச முடி­கிறது. பொரு­ளா­தா­ரம் தொடர்­பான பட்­டப்­ப­டிப்பை முடித்­துள்­ளார். சிறு வயது முதலே சினிமா மீது ஆர்­வம் அதி­க­மாம். நிறைய படங்­கள் பார்ப்­பா­ராம். அதன் பிறகு திரைப்­ப­டங்­களில் நடிக்க வேண்­டும், பெரிய நடி­கை­யா­கப் பெய­ரெ­டுக்க வேண்­டும் என்­பதே தமது கன­வாக இருந்­தது என்­கி­றார்.

"நான் எதை விரும்­பி­னேனோ அதைத்­தான் செய்து கொண்­டி­ருக்­கி­றேன். விரும்­பி­யது கிடைத்­த­தும் அதை தக்க வைத்­துக்கொண்­ட­தும் என்னைப் பொறுத்­த­வரை பெரிய விஷ­யம். அந்த வகை­யில் என்னை நானே பாராட்­டிக்கொள்­கி­றேன்," என்று சொல்­லும் சம்­யுக்தா, பெண்­கள் எப்­போ­துமே சொந்­தக்காலில் நிற்க வேண்­டும் என்­கி­றார்.

அத்­த­கைய பெண்­களை தாம் பெரி­தும் மதிப்­பதா­க­வும் சொல்­கி­றார். அனை­வ­ரை­யும் சமமாக நடத்­து­ப­வர்­க­ளை­யும் தன்­னம்­பிக்­கை­யுள்ள பெண்­க­ளை­யும் தமக்கு ரொம்­பப் பிடிக்­கும் என்று குறிப்­பி­டு­ப­வர், எதை­யும் மன­தில் வைத்­துக்­கொள்­ளா­மல் பேசு­வ­து­தான் தமது இயல்பு என்­கி­றார்.

"நான் சட்­டென உணர்ச்­சி­வ­சப்­ப­டக் கூடி­ய­வள். அதே­ச­ம­யம் துடுக்­கா­க­வும் பேசு­வேன். எப்­போ­தும் துணிச்­ச­லா­கச் செயல்­ப­டு­வது என் வழக்­கம். அதற்­காக அசட்­டுத் துணிச்­சல் என்று நினைத்­து­விட வேண்­டாம். எல்­லோரை­யும் சம­மா­கப் பார்ப்­பேன்," என்­கி­றார் சம்­யுக்தா.

முத்­தக்­காட்­சி­யில் நடித்­த­தால் எழுந்­துள்ள சர்ச்சை குறித்து?

"மலை­யா­ளத்­தில் வெளி­வந்த 'தீ வண்டி' படத்­தில் முத்­த­மி­டும் காட்­சி­யில் நடித்­தது குறித்து சமூக வலைத் ­த­ளங்­களில் ஏரா­ள­மா­னோர் பதி­வி­டு­கின்­ற­னர். அது தேவை­யற்ற காட்சி அல்ல.

"அந்­தப் படத்­தில் கதைக்­கும் கதா­பாத்­தி­ரத்­துக்­கும் எத்­தனை முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது அந்த முத்தம் என்று படம் பார்க்­கும்­போது ரசி­கர்­கள் உணர்ந்­தி­ருப்­பார்­கள்.

"கதை­யின் முக்­கி­மான பகு­தி­யாக முத்தக்­காட்சி இருந்­தால் யார் நடி­கர் என்­றெல்­லாம் பார்க்­கா­மல் நடிக்க நான் தயார்," என்­கி­றார் சம்­யுக்தா.

"படப்­பி­டிப்பு தளத்­தில் இ­ருந்து வெளி­யே­றும்­போது எனது கதா­பாத்­தி­ரத்­தின் மன­நி­லையை, உடை­க­ளைக் கழற்றி வைப்­ப­து­போல் அந்த அரங்கி­லேயே கழற்றி வைத்­து­விட்டு வந்து­விட வேண்­டும்.

"இப்­போது அதற்­குப் பழக்­கப்­பட்டு விட்­டேன். அத­னால் கிசு­கி­சுக்­களும் நியா­ய­மற்ற விமர்­சனங்­களும் என்­னைப் பாதிப்­ப­தில்லை," என்று சம்யுக்தா­வின் விளக்­கம் தெளி­வா­க­வும் கச்­சி­த­மா­க­வும் உள்­ளது.

தாம் நடித்த படங்­கள் வசூல் ரீதி­யில் தோல்வி அடை­யும்­போது வருத்­தத்­தில் மூழ்­கி­வி­டு­வார் சம்யுக்தா. அதன் பின்­னர் புதுப்­படத்­துக்­கான படப்­பி­டிப்பு தொடங்­கிய பிற­கு­தான் இயல்பு நிலைக்கு தம்­மால் திரும்ப முடி­யும் என்­கி­றார்.

"வெற்­றி­யை­யும் தோல்­வி­யை­யும் சம­மா­கப் பார்க்க வேண்­டும் என்­பார்­கள். அது சரி­தான். எனி­னும் ஒரு படைப்­புக்­காக கடு­மை­யாக உழைத்த பிறகு அதற்­கான வர­வேற்­பும் பல­னும் கிடைக்­கா­மல் போகும்­போது நிச்சயம் மனம் வலிக்­கும்," என்­பதே சம்யுக்­தா­வின் பதில்.

'வாத்தி' படத்­தின் படப்­பி­டிப்பு தொடங்­கி­யுள்ள நிலை­யில், தனது காட்சி­க­ளுக்­காக காத்­தி­ருக்­கி­றார்.