அஜித்தின் 'வலிமை' படம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை. இதையடுத்து தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
அதே சமயத்தில்தான் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படமும் வெளி யாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித், விஜய் படங்கள் நேரடியாக மோதும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அண்மைய தகவலின்படி 'வலிமை' படத்தை மார்ச் இறுதியில் வெளியிட தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
இணையத் தொடர்களில் நடிக்க, பணியாற்ற தயங்கிய தமிழ்த் திரையுலகத்தினர் இப்போது மனம் மாறியுள்ளனர். அந்த வகையில் நடிகர் பிரசன்னா இணையத்தொடர் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். முழு நீள நகைச்சுவைப் படைப் பாக உருவாகும் இத்தொடரில் எஸ்.பி.பி. சரண், தன்யா பால கிருஷ்ணன், கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் உள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் இத்தொடரின் கதை, திரைக்கதையை எழுதி இயக்குகிறார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கீர்த்தி சுரேஷ் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளார். இது தொடர்பாக ஒரு காணொளிப் பதிவை வெளியிட்டுள்ள அவர், தமக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரி விப்பதாகக் கூறியுள்ளார். "இந்தக் காலத்தில் 'எதிர்மறை' (நெகட்டிவ்) என்பதே நேர்மறை (பாசிடிவ்) ஆகிவிட்டது என்று கொரோனா பரிசோதனை முடிவு குறித்து சமூக வலைத் தளத்தில் அவர் பதிவிட்டுள் ளார். மேலும், ஒரு செல்ஃபி படத்தையும் பகிர்ந்துள்ளார் கீர்த்தி. ஏற்கெனவே உடல் இளைத்து காணப்பட்ட கீர்த்தி, கொரோனா பாதிப்பால் மேலும் இளைத்துவிட்டதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் 'விடுதலை' படத் தில் வாத்தியாராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இதையடுத்து, விஜய்யை அடுத்து சேதுபதியும் 'வாத்தி'யாகிவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளனர். 'விடுதலை' படத்தில் காவல்துறையில் பணியாற்றும் காவலராகவும் கதை நாயகனாகவும் நடிக்கிறார் சூரி. கதைப்படி ஆசிரியராக இருக்கும் சேதுபதி, பின்னர் நக்சலைட் தீவிரவாதியாக மாறுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் கதை. இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதை.
இளையராஜாவின் இசை விண்வெளியில் ஒலிக்க உள்ளது. தமிழக மாணவர்கள் மிக குறைவான எடைகொண்ட செயற்கைக் கோளை உரு வாக்கி உள்ளனர். அதில்தான் இளையராஜாவின் பாடலை ஒலிக்கச் செய்ய உள்ளனர். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளையராஜா இசை அமைத் துள்ள பாடலை மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். சுவானந்த் கிர்கிரே எழுதிய இப்பாடல் இந்தியாவின் வளர்ச்சியை பறைசாற்றும் விதமாக உள்ளது. இதற்கு தாமே இசையமைத்துப் பாடியுள்ளார் இளையராஜா.

