கடந்த இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் தலைப்பாக உருவெடுத்துள்ளது தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு. அறிவிப்புதான் திடீரென வந்துள்ளதே தவிர, கடந்த பல மாதங்களாகவே இருவரது உறவில் சிக்கல் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் பிரச்சினை வெடிக்கும்போது ரஜினி இருவரையும் அழைத்து சமாதானம் செய்வார் என்றும் அதன் பிறகு சமாதானம் ஏற்படும் என்றும் தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஐஸ்வர்யா பிரிவு தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் மிகக் கவனமாக தன் பெயரை 'ஐஸ்வர்யா ரஜினிகாந்த்' என்று குறிப்பிட்டிருந்ததைக் கண்டு இரு வருக்கும் நெருக்கமானவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தொடங்கியதுமே ஐஸ்வர்யா பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்றும் ரஜினி மேற்கொண்ட சமரச முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
"உறவினர்கள், நண்பர்கள் சிலரும் தலையிட்ட போதிலும் தனுஷ் தன் முடிவில் பிடிவாதமாக உள்ளார். நண்பர்களாகப் பிரிகிறோம் என்பதற்கு, இருவரும் விவாகரத்து செய்யப் போவதில்லை என்று இரு வீட்டாரும் புரிந்துகொண்டுள்ளனர். இரு மகன்களும் ஐஸ்வர்யா பராமரிப்பில்தான் தொடர்ந்து இருப்பர். இதை தனுஷுடன் பேசி முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா.
"அண்மைக் காலமாக தன் தந்தையைப் போலவே ஐஸ்வர்யாவும் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
"தனுஷின் நிலை கண்டு அவரது குடும்பத்தினரும் கவலையில் உள்ளனர். அவர் சென்னையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். மகனுக்குத் துணையாக இருக்க தனுஷின் தாயார் அங்கு வந்து தங்கியுள்ளாராம். தனுஷ் போயஸ் தோட்டப் பகுதியில் புது வீடு கட்டி குடியேறியதும் எதிரே உள்ள வீட்டில்தான் ஐஸ்வர்யாவும் இரு மகன்களும் இருப்பார்கள்," என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
தனுஷ் தற்போது படப்பிடிப்புக் காக ஹைதராபாத்தில் உள்ளார். அவர் சென்னை திரும்பியதும் இந்த விவகாரம் தொடர்பாக புதுத் தகவல்கள் வெளியாகக்கூடும்.

