இந்தியாவை வலம் வரும் ஐஸ்வர்யா

இந்தியாவை வலம் வரும் ஐஸ்வர்யா

1 mins read
f4ca78fd-3efa-436c-b180-25e92d038a89
-

இந்­தி­யா­வில் உள்ள முக்­கி­ய­மான இடங்­கள் அனைத்­தை­யும் நேரில் சென்று சுற்­றிப்­பார்க்க வேண்­டும் என முடிவு செய்­துள்­ளா­ராம் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

முதல் கட்­ட­மாக, அண்­மை­யில் காஷ்­மீர் சென்­றுள்­ளார். அங்கு கடும் பனிப்­பொ­ழி­வுக்கு மத்­தி­யில் எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டங்­களை சமூக வலைத்­த­ளத்­தில் வெளி­யிட்­டுள்­ளார்.

காஷ்­மீ­ரைப் போன்ற மிக அழ­கான இடத்தை இது­வரை பார்த்­த­தில்லை என்­றும் பனிப்­பொ­ழி­வில் நடந்து சென்ற நிமி­டங்­களை வாழ்­நா­ளில் மறக்­கவே இய­லாது என்­றும் தனக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் கூறி வரு­கி­றா­ராம். இனி ஓய்வு கிடைக்­கும் போதெல்­லாம் இந்­தி­யா­வின் முக்­கிய நக­ரங்­களை வலம்­வ­ரப் போவ­தாக கூறும் ஐஸ்­வர்யா, தற்­போது தமி­ழில் 'டிரை­வர் ஜமுனா', 'மோகன்­தாஸ்', 'தி கிரேட் இண்­டி­யன் கிச்­சன்' உள்­ளிட்ட படங்­களில் நடித்து வரு­கி­றார்.