‘அஜித்தின் எளிமையால் வியந்து போனேன்’

குணச்­சித்­திர நடி­கர் ஜி.எம்.சுந்­தரை திரை­யில் பல­முறை பார்த்­தி­ருப்­போம். ஆனால், அவ்­வப்­போது திரை­யு­ல­கில் இருந்து காணா­மல் போய்­வி­டு­வார்.

கே. பால­சந்­த­ரின் ‘புன்­னகை மன்­னன்’ படத்­தின் மூலம் அறி­மு­க­மா­ன­வர் சுந்­தர். அவ­ரது திரைப்­ப­ய­ணம் நீள­மா­னது. ஆனால் நடித்த படங்­க­ளின் எண்­ணிக்கை குறைவு.

இந்­நி­லை­யில், கடந்த 2021ஆம் ஆண்டு தன் திரை வாழ்க்­கை­யில் மிக முக்­கி­ய­மான ஆண்­டாக அமைந்­து­விட்­டது என்­கி­றார் சுந்­தர். கொரோனா கால­கட்­டத்­தில் ‘சார்­பட்டா பரம்­பரை’, ‘மண்­டேலா’, ‘ரைட்­டர்’ ஆகிய படங்­களில் இவர் ஏற்று நடித்த கதா­பாத்­தி­ரங்­கள் மிக­வும் பேசப்­பட்­டவை. தமிழ், மலை­யா­ளப் படங்­கள் என பர­ப­ரப்­பாக வலம்­வ­ரு­கி­றார் சுந்­தர்.

‘புன்­னகை மன்­னன்’, ‘சத்யா’, `கடமை கண்­ணி­யம் கட்­டுப்­பாடு’, `புலன் விசா­ரணை’ என்று தேர்ந்­தெ­டுத்த சில கதா­பாத்­தி­ரங்­க­ளில்­தான் நடித்­துள்­ளேன். எனி­னும், பட வாய்ப்­பு­கள் சரி­யாக அமை­ய­வில்லை. அதனால் சொந்­தத் தொழிலை கவ­னிக்­கப் போய்­விட்­டேன்.

“மனம் முழு­வ­தும் திரைப்­ப­டங்­கள் பக்­கமே இருந்­தது. அத­னால் வாய்ப்பு கிடைக்­கும்­போ­தெல்­லாம் நடித்து வந்­தேன். ‘சூது கவ்­வும்’ படம் வெளி­யானபோது, இயக்­கு­நர் மதன் குமா­ர­சா­மி­யி­டம் நானே வலியச் சென்று வாய்ப்பு கேட்டு நடித்த படம்­தான் ‘காத­லும் கடந்து போகும்’. அதன்பிறகு திரை­யு­ல­கில் இரண்­டா­வது சுற்­றைத் தொடங்கி உள்­ளேன். 2021ஆம் ஆண்டு பல பேருக்கு எப்­படி என்று தெரி­ய­வில்லை. ஆனால், ஒரு நடி­க­னாக எனக்கு அது அற்­பு­த­மான ஆண்டு.

“நான் நடித்த ‘மகா­முனி’ படத்­தைப் பார்த்­து­விட்டு இயக்­கு­நர் வினோத் ‘வலிமை’ படத்­தில் நடிக்க அழைத்­தார்.

“படப்­பி­டிப்­பில் அஜித்தை சந்தித்த போது ‘உங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­று­வ­தில் மகிழ்ச்சி’ என்­றேன். பதி­லுக்கு, அவர் ‘எனக்­கும் உங்­க­ளுடன் நடிப்­ப­தில் மகிழ்ச்சி’ என்­றார். ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது.

“‘நான் அப்படி ஒன்­றும் பெரிய நடி­கன் இல்­லையே சார்’ என்று சொன்­ன­தும், ‘அப்­ப­டிச் சொல்­லா­தீர்­கள். உங்­க­ளுக்கு எப்­படி ஓர் இயக்­கு­நர் வாய்ப்பு கொடுத்­தாரோ, அதே மாதி­ரி­தான் நானும் இங்கு வந்­துள்­ளேன்’ என்­றார். அவரது பணிவு வியக்க வைத்தது,” என்கிறார் சுந்தர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!