திரைத் துளி­கள்

 விவாகரத்து விவகாரத்தில் இருந்து மெல்ல மீண்டு வருகிறார் சமந்தா. அண்மையில் சுவிட்சர்லாந்துக்கு பயணம் மேற்கொண்ட அவர், அங்கு பனிச்சறுக்கு கற்றுக்கொண்டாராம்.

அந்த அனுபவம் அருமையாக இருந்தது என்று தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பனிச்சரிவு பயிற்சியின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளதை அடுத்து, ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமது விவாகரத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் முன்பு பதிவிட்டிருந்த சமந்தா, தற்போது அவை அனைத்தையும் நீக்கியுள்ளார்.

இதையடுத்து, அவர் மீண்டும் நாகசைதன்யாவுடன் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 276 படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய திரையுலகில் இருந்து ‘ஜெய் பீம்’ தவிர, மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர்’ படமும் இடம்பெற்றுள்ள நிலையில், ஆஸ்கர் விருது விழா எதிர்வரும் மார்ச் 27ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில் இறுதிப்பட்டியல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

 நடப்பாண்டில் அதிக படங்களில் நடித்த நாயகி என்ற பெருமை ரகுல் பிரீத் சிங்குக்கு கிடைக்கக்கூடும். காரணம், அவர் நடித்துள்ள ஏழு படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன. அவற்றுள் ஆறு இந்திப் படங்கள். தமிழில் சிவகார்த்தி கேயனுடன் ‘அயலான்’ படத் தில் நடித்துள்ளார். மேலும் ‘இந்தியன்-2’ படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் என்றாலும், அது இந்த ஆண்டு வெளியீடு காண வாய்ப்பில்லை.

“இந்த புத்தாண்டு எனக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன். ஒவ்வொரு படத்திலும் கூடுமானவரை வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்,” என்கிறார் ரகுல் பிரீத் சிங்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!