'புஷ்பா' பாடல்கள்: ஒரு பில்லியன் பார்வைகள்

1 mins read
e6de94d5-2a13-4ed9-b9db-d51ee514d07f
'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா. -

அல்லு அர்­ஜுன் நடிப்­பில் அண்­மை­யில் வெளி­யீடு கண்ட 'புஷ்பா' படத்­தின் பாடல்­கள் பிற மொழி­களி­லும் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளன.

அனைத்­து மொழி­க­ளி­லும் இந்­தப் பாடல்­கள் இணையத் தளங்­களில் ஒரு பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான பார்­வை­க­ளைப் பெற்­றுள்­ளது என இவற்­றின் உரி­மை­யைப் பெற்­றுள்ள ஆதித்யா மியூ­சிக் நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

பொது­வாக ஒரு படத்தை பிற மொழி­களில் மொழி­மாற்­றம் செய்து வெளி­யி­டும்­போது, அதில் இடம்­பெற்­றுள்ள பாடல்­க­ளுக்கு பெரிய வர­வேற்பு கிடைக்­காது.

எப்­போதோ ஒரு முறை­தான் மொழி­மாற்­றம் செய்­யப்­படும் பாடல்­கள் பிற மொழி ரசி­கர்­க­ளைக் கவ­ரும். அந்த வகை­யில், நேர­டித் தெலுங்­குப் பட­மான 'புஷ்பா' படப் பாடல்­கள் தமிழ், கன்­ன­டம் உள்­ளிட்ட பிற­மொழி ரசி­கர்­க­ளை­யும் கவர்ந்­துள்­ளன.

'புஷ்பா' படத்­தில் இடம்­பெற்று சர்ச்­சையை ஏற்­ப­டுத்­திய 'ஓ சொல்­றியா...' என்ற பாடலை நடிகை ஆண்ட்­ரியா பாடி­யுள்­ளார். இதே­போல் 'சாமி சாமி' பாடலை தமி­ழில் ராஜ­லட்­சுமி பாடி­னார். இப்­பா­ட­லுக்கு ராஷ்­மி­கா­வின் நடன அசை­வு­கள் கச்­சி­த­மா­கப் பொருந்தி இருந்­தன.

இந்­நி­லை­யில், இந்­தப் பாடல்­களுக்கு இணை­யத்­தில் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது. வேறு எந்த தென்­னிந்­திய மொழிப் பட­மும் இது­வரை சாதிக்­காத வகையில், 'புஷ்பா' படப் பாடல்­கள் ஒரு பில்­லி­யன் பார்­வை­க­ளைப் பெற்­றி­ருப்­பது பெரும் சாதனை என்­கிறது அப்படக்குழு.

, :

  