வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட நடிகை

1 mins read
ff34aa90-c9bf-4c1a-92de-6cc2cd67f562
2018 டிசம்பர் 3ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் விமான நிலையத்திற்கு வெளியே புகைப்படங்களுக்குக் காட்சியளிக்கும் பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் தம்பதி. படம்: ராய்ட்டர்ஸ் -

பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் தம்பதியர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதாக சமூக ஊடகத்தில் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், "நாங்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தச் சிறப்புமிக்க நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பத்தின்மீது கவனம் செலுத்துவதால், தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளிக்க கேட்டுக்கொள்கிறோம். மிக்க நன்றி," என்று தெரிவித்துள்ளனர்.

இத்தம்பதிக்குப் பிறந்திருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பது குறித்து இவர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால் இவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.