‘சூர்யாவைப் பின்பற்றுவேன்’

'ஒரு குப்­பைக் கதை' படம் வசூல் ரீதி­யில் பெரி­தாக சாதிக்­க­வில்லை என்­றா­லும், தனது நடிப்பு விமர்­ச­கர்­க­ளால் பாராட்­டப்­பட்­ட­தில் மன­நி­றைவு அடைந்­த­தா­கச் சொல்­கி­றார் மனிஷா யாதவ்.

தற்­போது ரமணி சங்­கர் இயக்­கும் 'கருட சுற்று' படத்­தில் கதா­நா­ய­கி­யாக நடித்து வரு­ப­வர், மேலும் இரண்டு தமிழ்ப் படங்­களில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளா­ராம்.

"வணிக ரீதி­யி­லான படங்­களில் நான் நடிப்­ப­தில்லை என்று சிலர் குறை கூறு­கி­றார்­கள். அது தவறு. வணி­கப் படங்­களில் நடிக்க நான் தயங்­கு­வ­தில்லை. ஆனால், அது­போன்ற கதை­கள், கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு மத்­தி­யில் சவா­லான வேடங்­க­ளுக்­கும் இட­ம­ளிக்க வேண்­டும்.

"எனது முதல் பட­மான 'வழக்கு எண் 18/9' வெளி­யாகி பத்து ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. என்னை அறி­மு­கப்­ப­டுத்­திய கையோடு, படத்­தின் இயக்­கு­நர் பாலாஜி சக்­தி­வேல் சார் சொன்ன அறி­வு­ரையை இன்று வரை மறக்­க­வில்லை.

"எந்த வேட­மாக இருந்­தா­லும், யதார்த்­த­மான நடிப்பை வெளிப்­ப­டுத்த வாய்ப்பு இருக்க வேண்­டும். இல்­லை­யெனில், அந்த கதா­பாத்­தி­ரத்­தில் நடித்து பலன் இல்லை என்­றார். ஒரு மாண­வி­யாக அவ­ரி­டம் நிறைய கற்­றுக்­கொண்­டேன்," என்று சொல்­லும் மனிஷா, 'வழக்கு எண் 18/9' படத்­தில் நடித்­த­போது கல்­லூ­ரி­யில் இரண்­டாம் ஆண்டு படித்­துக்­கொண்­டி­ருந்­தா­ராம்.

அத­னால் பள்ளி மாணவி வேடத்­துக்கு தாம் பொருத்­த­மாக இருப்­போமா என்று சந்­தே­கப்­பட்­டுள்­ளார். ஆனால், பாலாஜி சக்­தி­வேலோ காணொளி வசதி மூலம் தொடர்பு கொண்டு பேசி­யி­ருக்­கி­றார்.

அப்­போது மனி­ஷா­வின் தோற்­றத்­தைப் பார்த்­து­விட்டு, 'நீதான் என் படத்­துக்குப் பொருத்­த­மான நாயகி' என்று கூறி­னா­ராம்.

முதல் படம் நல்ல பெயர் வாங்­கிக்­கொ­டுத்த பிறகு படங்­க­ளைத் தேர்வு செய்­த­தில் தாம் சில தவ­று­க­ளைச் செய்­து­விட்­ட­தா­கச் சொல்­கி­றார் மனிஷா. அத­னால்­தான் தம்­மால் முன்­னணி நாய­கி­யாக வளர முடி­ய­வில்லை என்­கி­றார்.

"அண்­மை­யில் சென்னை வந்­தி­ருந்­த­போது இயக்­கு­நர் பாலாஜி சக்­தி­வே­லைச் சந்­தித்­தேன். அப்­போது 'ஒரு குப்­பைக் கதை' படத்­தில் நடித்­த­தற்­கா­கப் பாராட்­டி­னார். இது­போன்ற சவா­லான கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தயக்­க­மின்றி ஏற்க வேண்­டும் என்­றும் அவர் சொன்ன அறி­வு­ரையை நான் பின்­பற்­று­வ­தற்­காக வாழ்த்­து­வ­தா­க­வும் கூறி­னார்.

"பல நடி­கை­கள் 'ஒரு குப்­பைக் கதை' படத்­தில் நடிக்­கத் தயங்­கி­னர். சில நடி­கை­கள் கதை­யைக் கேட்­கும் முன்பே நடிக்க முடி­யாது என்று கூறி­விட்­ட­தாக அறிந்­தேன். ஆனால், அந்த கதை­யைக் கேட்­ட­தும், இது எனக்­கான படம் என்று தோன்­றி­யது.

"உண்­மை­யைச் சொல்ல வேண்­டு­மா­னால், அந்­தப் படம் எனது திரை வாழ்க்­கை­யில் திருப்­பு­மு­னையை ஏற்­ப­டுத்­திய படம் என்­பேன். இப்­போது பெங்­க­ளூரு வரை என்­னைத் தேடி வந்து பல இயக்­கு­நர்­கள் கதை சொல்­கி­றார்­கள். நான் கேட்­கும் சம்­ப­ளம் கிடைக்­கிறது. இந்த நிலையை சாத்­தி­ய­மாக்­கி­யது அந்­தப் படம்­தான்," என்­கி­றார் மனிஷா யாதவ்.

மணி­ரத்­னம் இயக்­கத்­தில் நடிக்க வேண்­டும், சூர்யா­வு­டன் ஜோடி சேர வேண்­டும், வணிக ரீதி­யான படங்­களி­லும் நடிக்க வேண்­டும் என்று இவ­ரது விருப்­பப் பட்­டி­யல் சற்று நீள­மா­கத்­தான் உள்­ளது. அண்­மை­யில் 'ஜெய் பீம்' படம் பார்த்­தா­ராம். முதன்­முறை பார்த்­த­போது ஏற்­பட்ட தாக்­கம், அடுத்­த­டுத்து மூன்று முறை இப்­ப­டத்­தைப் பார்த்­த­போ­தும் நீடித்­த­தாம்.

"சூர்யா சாரின் நடிப்பு உண்­மை­யில் என்னை மிரள வைத்­து­விட்­டது. ஒரு நடி­க­ரா­க­வும் தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் அவர் திரை­யு­லகை எந்த அளவு நேசிக்­கி­றார் என்­பதை படம் பார்த்­த­போது என்­னால் உணர முடிந்­தது. இந்த விஷ­யத்­தில் நான் அவ­ரைப் பின்­பற்ற விரும்­பு­கி­றேன். ஏனெ­னில் அவ­ரைப் போலவே நானும் சினி­மாவை அள­வுக்­க­தி­க­மாக நேசிக்­கி­றேன். இது போன்ற படங்கள்தான் ரசிகர்களையும் திரைத்துறையை நேசிக்கத் தூண்டும்," என்கிறார் மனிஷா.

, :   

மனிஷா யாதவ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!