இணையத்தில் வெளியாகும் ‘விருமன்’

கார்த்தி நாய­க­னாக நடிக்க, முத்­தையா இயக்­கி­யுள்ள படம் ‘விரு­மன்’. இதில் இயக்­கு­நர் சங்­க­ரின் மகள் அதிதி நாய­கி­யாக நடிக்­கி­றார். இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு முடி­வ­டைந்து, தொழில்­நுட்­பப் பணி­கள் இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யுள்­ளன.

இந்­நி­லை­யில், ‘விரு­மன்’ படத்தை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யிட அதன் தயா­ரிப்­பா­ள­ரும் நடி­க­ரு­மான சூர்யா முடிவு செய்­துள்­ள­தாகத் தக­வல் வெளி­யாகி உள்­ளது. இது தொடர்­பாக முன்­னணி ஓடிடி தளங்­க­ளு­டன் பேச்சு­வார்த்தை நடந்து வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கிறது.

கொரோனா கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக திரை­ய­ரங்­கு­களில் ஐம்­பது விழுக்­காடு இருக்­கை­கள் மட்­டுமே நிரப்­பப்­படும் என தமி­ழக அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது. இத­னால் படங்­க­ளின் வசூல் குறை­யும் என்­ப­தால் திரை­ய­ரங்­கு­க­ளுக்­குப் பதி­லாக ஓடிடி தளங்­களில் படங்­களை வெளி­யிட பல தயா­ரிப்­பா­ளர்­கள் விரும்­பு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், தொடக்­கம் முதலே ஓடிடி தளங்­க­ளுக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்டை எடுத்­த­வர் சூர்யா என்­ப­தால் அவர் தயா­ரித்­துள்ள படத்தை நல்ல விலைக்கு வாங்க ஓடிடி நிறு­வ­னங்­கள் முன்­வந்­துள்­ள­ன­வாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!