சம்பளத்தை உயர்த்திய சிம்பு: பரிசளித்து வாழ்த்திய தாய்

‘மாநாடு’ படத்­தின் வெற்றி, சிம்­புவை உற்­சா­கப்­ப­டுத்தி புது வேகத்­தை­யும் தந்­துள்­ளது.

தற்­போது கவு­தம் மேனன் இயக்­கத்­தில் அவர் நடிக்­கும் ‘வெந்து தணிந்­தது காடு’ படம் நிறை­வ­டை­யும் தறு­வா­யில் உள்­ளது. இதை­ய­டுத்து ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ என அடுத்­த­டுத்த படங்­க­ளுக்­கான வேலை­க­ளை­யும் ஒரு­சேர கவ­னித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், அஷ்­வத் மாரி­முத்து இயக்­கத்­தில் நடிக்க அவர் ஒப்­புக்­கொண்­டுள்­ள­தா­கத் தக­வல். ஒற்றை இலக்­கத்­தில் சம்­ப­ளம் வாங்­கி­ய­வர், அண்­மைய வெற்­றிக்­குப் பிறகு அதை இரட்டை இலக்­கங்­க­ளாக ஏற்­றி­விட்­டா­ராம்.

இந்­நி­லை­யில், அண்­மை­யில் ‘ஓ மை கட­வுளே’ படத்­தின் இயக்­கு­நர் அஷ்­வத் மாரி­முத்­து­வி­டம் கதை கேட்­டுள்­ளார் சிம்பு. அது பிடித்­துப்­போ­கவே, கால்­ஷீட் ஒதுக்க முடிவு செய்­துள்­ளா­ராம். இந்­தப் படத்தை ஏஜி­எஸ் நிறு­வ­னம் தயா­ரிப்­பது என முடி­வாகி உள்­ளது.

அஷ்­வத் மாரி­முத்து தமி­ழில் பெரிய வெற்­றிப் படத்தை கொடுத்த பிற­கும், யாரும் எதிர்­பா­ராத வகை­யில் தெலுங்­குப் படம் இயக்க சென்று­விட்­டார். எனவே, தமி­ழில் அவர் அடுத்து இயக்­கப்­போ­கும் படம் குறித்த எதிர்­பார்ப்பு ரசி­கர்கள் மத்­தி­யில் அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அவர் சிம்­புவை வைத்து படம் இயக்­கு­கி­றார் என்ற தக­வல் ரசி­கர்­களை உற்­சா­கப்­படுத்தி உள்­ளது. மேலும், தன் மக­னுக்கு மினி கூப்­பர் ரக காரை பரி­ச­ளித்­துள்­ளார் சிம்­பு­வின் தாயார். இந்­தப் பரிசை தாம் எதிர்­பார்க்­க­வில்லை. ‘நீண்ட நாள்­க­ளுக்­குப் பிறகு அம்மா தந்­துள்ள பரிசு இது’ என்று சொல்லி மகிழ்­கி­றா­ராம் சிம்பு.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!