செய்தியாளராக விரும்பிய கௌரி

திரைப்­ப­டங்­களில் நடிக்­கும் ஆர்­வம் தமக்கு இருந்­த­தில்லை என்­றும் ஊட­கத் துறை­யில் சாதிக்க வேண்­டும் என்­பதே தமது விருப்­ப­மாக இருந்­தது என்­றும் சொல்­கி­றார் கௌரி கிஷன்.

'96', 'மாஸ்­டர்' படங்­களில் இவ­ரது நடிப்பு இளை­யர்­களை வெகு­வா­கக் கவர்ந்­தது. இந்­நி­லை­யில், கதா­நா­ய­கி­யாக நடிக்­கத் தயா­ராகி வரு­கி­றா­ராம் கௌரி.

"சென்­னை­யில்­தான் பள்­ளிப்­ப­டிப்பை முடித்­தேன். அத­னால் மலை­யா­ளம் தாய்­மொழி என்­றா­லும் தமி­ழில் என்­னால் சர­ள­மா­கப் பேச முடி­கிறது. ஊட­க­வி­யல் துறை­யில் படிப்பை முடித்­த­தும் சமூக அவ­லங்­களை அம்­ப­லப்­ப­டுத்­தும் ஊட­க­வி­ய­லா­ள­ராகப் பணி­யாற்ற வேண்­டும் என்பதும் சிறந்த கட்­டு­ரை­யா­ள­ராக வேண்­டும் என்­பதுமே எனது கன­வாக இருந்­தது.

"ஆனால், கல்­லூ­ரி­யில் படித்­த­போது சினிமா வாய்ப்பு தேடி வந்­தது. சினி­மா­வும்­கூட ஊட­கத்­து­றை­யின் பிரி­வு­தான் என்று பல­ரும் கூறி­ய­தால், இன்று நடி­கை­யாக உரு­வெ­டுத்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் கௌரி.

தமி­ழில் தற்­போது ஜெகன் விஜ­ய­முத்து இயக்­கும் படத்­தில் இவ­ரும் வினோத் கிஷ­னும் நாய­கன், நாயகி­யாக நடித்­துள்­ள­னர். மேலும், எழுத்­தா­ளர் சு.சமுத்­தி­ரம் எழு­திய 'ஒரு கோட்­டுக்கு வெளியே' என்ற நாவலை 'உல­கம்மை' என்ற தலைப்­பில் பட­மாக எடுக்க உள்­ள­னர். பார­தி­ரா­ஜா­வின் உத­வி­யா­ளர் விஜய் பிர­காஷ் இயக்­கும் அந்­தப் படத்­தில், கௌரி­தான் கதா­நா­யகி.

"இதைத் தவிர, கிருத்­திகா உத­ய­நிதி இயக்­கும் இணை­யத் தொட­ரில் காளி­தாஸ் ஜெய­ரா­மு­டன் நடித்­துக்கொண்­டி­ருக்­கி­றார் கௌரி.

"நான் இன்­னும் சின்­னப் பெண்­ணா­கவே இருப்­ப­தாக சிலர் நினைக்­கி­றார்­கள். மேலும், எனது அப்­பா­வித்­த­ன­மான தோற்­றத்­தைப் பார்த்து அதற்­கேற்ற மென்­மை­யான கதா­பாத்­தி­ரங்­க­ளையே தர விரும்­பு­கி­றார்­கள். இப்­போது கொஞ்­சம் பெரிய பெண்­ணாக ஆகி­விட்­ட­தாக நினைக்­கி­றேன். அத­னால், எனக்­குப் பொருத்­த­மான கதா­பாத்­தி­ரங்­கள் அமைய பொறு­மை­யு­டன் காத்­தி­ருக்­கி­றேன்.

"திரைத்­து­றை­யில் அவ­ச­ரப்­பட்­டால் எதை­யும் சாதிக்க இய­லாது," என்கிறார் கௌரி.

கௌரி கிஷன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!