தங்கை வேடத்தில் நடிக்கும் சாய் பல்லவி

தெலுங்குப் படம் ஒன்றில் தங்கை வேடத்தை ஏற்றுள்ளார் சாய் பல்லவி. அருமையான கதைக்களம் அமைந்ததால் இவ்வாறு நடிக்க சம்மதித்ததாக சாய் பல்லவி தரப்பு கூறுகிறது.

தெலுங்கில் முன்னணி இயக்குநராக உள்ள திரிவிக்ரம், அடுத்து, மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்குகிறார். கதைப்படி, மகேஷ் பாபு அண்ணனாகவும் சாய் பல்லவி தங்கையாகவும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்துக்கான கதையைக் கேட்பதற்கு முன்பு தங்கை வேடத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தாராம் சாய் பல்லவி. பின்னர் திரிவிக்ரம் இயக்கும் படம் என்பதால் கதையைக் கேட்ட பிறகு மனநிறைவுடன் நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மற்றொரு படத்தில் சிரஞ்சீவியும் கீர்த்தி சுரேஷும் அண்ணன், தங்கையாக நடிக்கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!