‘பேட்ட’ உரிமை: மலேசிய நிறுவனம் புகார்

'பேட்ட' படத்­தின் வெளி­நாட்டு விநி­யோக உரி­மையை மையப்­ப­டுத்தி சர்ச்சை வெடித்­துள்­ளது. இது தொடர்­பாக மலே­சிய நிறு­வ­னம் ஒன்று ஸ்ரீதே­னாண்­டாள் பிலிம்ஸ் நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர் முரளி மீது சென்னை காவல்­து­றை­யில் புகார் அளித்­துள்­ளது.

அந்­நி­று­வ­னம் 'பேட்ட' படத்­தின் விநி­யோக உரிமை தங்­க­ளி­டம் இருப்­ப­தா­கக் கூறி, கடந்த 2018ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 30 கோடி ரூபாய் பெற்­றுக்­கொண்டு ஏமாற்றி­விட்­ட­தாக மலே­சி­யா­வைச் சேர்ந்த 'மாலிக் ஸ்டி­ரிம்ஸ் கார்ப்­ப­ரே­ஷன்' என்ற நிறு­வ­னம் கூறு­கிறது.

பணம் கொடுத்த பிற­கு­தான் தேனாண்­டாள் நிறு­வ­னத்­திடம் குறிப்­பிட்ட உரிமை இல்லை என்­பது தெரிய வந்­த­தா­க­வும் இத­னால் அதிர்ச்சி அடைந்து கொடுத்த பணத்தை திருப்­பிக் கேட்­ட­தா­க­வும் அந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

"கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 15 கோடி ரூபாய் பணத்தை திருப்­பிக் கொடுத்­து­விட்டு, மீத­முள்ள 15 கோடி ரூபாய்க்கு 5 கோடி ரூபாய்க்கு முன்­தே­தி­யிட்ட காசோ­லை­யும் மீத­முள்ள 10 கோடிக்கு 'காஞ்­சனா 3', 'நான் ருத்­ரன்' திரைப்­ப­டங்­க­ளின் விநி­யோக உரி­மை­யைத் தரு­வ­தா­க­வும் கூறி மீண்­டும் ஒப்­பந்­தம் செய்துகொண்­டார் முரளி.

"ஆனால், 'காஞ்­சனா 3' படத்­தின் விநி­யோக உரி­மை­யும் ஸ்ரீதே­னாண்­டாள் பிலிம்ஸ் நிறு­வ­னத்­தி­டம் இல்லை என்­ப­தும் 'நான் ருத்­ரன்' படம் இயக்­கப்­ப­டா­ம­லேயே கைவி­டப்­பட்­ட­தும் தெரி­ய­வந்­தது. மேலும், 5 கோடிக்­கான காசோ­லை­யும் முர­ளி­யின் வங்­கிக்­க­ணக்­கில் பணம் இல்­லா­மல் திரும்பி வந்­து­விட்­டது," என்று மலே­சிய நிறு­வ­னம் புகார் மனு­வில் குறிப்­பிட்­டுள்­ள­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!