தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் ஹைதராபாத்தில் ஒரே தங்குவிடுதியில் தங்கியுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தனுஷ் படப்பிடிப்புக்காகவும் ஐஸ்வர்யா சொந்த கார ணங்களுக்காகவும் ஹைதரா பாத்தில் தங்கியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் சமாதானப்படுத்த நண்பர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாக வும் அதற்கான பேச்சு வார்த்தையை நடத்துவதற்காகத் தான் ஒரே இடத்தில் இருவரும் தங்கியுள்ளனர் என்றும் ஊடகத் தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இருவரது தரப்பும் இதை உறுதி செய்யவில்லை.
குத்துச்சண்டை பயிற்சி பெறுவதாக கூறியுள்ளார் நடிகை நீத்து சந்திரா. ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்த போது சில சண்டைக் காட்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததாம்.
அதன் பிறகுதான் குத்துச்சண்டை மீது தமக்கு ஆர்வம் ஏற்பட்டது என்றும் இப்போது சிறந்த பயிற்சியாளர் ஒருவரிடம் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறுகிறார்.
"ஹாலிவுட் படத்துக்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தேன். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. அடிதடி சண்டைகள் நிரம்பிய படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாவது மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார் நீத்து சந்திரா.
இயக்குநர் அட்லி அடுத்து 'புஷ்பா' பட நாயகன் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஷாருக் கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்நிலையில், அல்லு அர்ஜுனை அண்மையில் சந்தித்தபோது அட்லி சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போனதாம். இதையடுத்து, அவருக்கு கால்ஷீட் தர முடிவு செய்துள்ளார் அல்லு அர்ஜுன். இதற்கிடையே, விஜய்யின் அடுத்த படத்தையும் அட்லி இயக்குவார் என்று கூறப்படுகிறது.
மும்பையில் புது வீடு வாங்கி குடியேறி உள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.
படங்களில் நடித்து தாம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வாங்கியுள்ள வீடு என்றும் அதன் உள் அலங்காரப் பணிகளை தாமே திட்டமிட்டு மேற்கொண்ட தாகவும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இந்த நல்ல நாளுக்காக காத்திருந்தேன். புது வீட்டில் குடிபுகும் நிகழ்வு சிறப்பாக நடந்ததில் மகிழ்ச்சி," என்கிறார் பூஜா. இவரைப் போலவே மும்பையில் அண்மையில் வீடு வாங்கிய மற்றொரு நடிகை ராஷ்மிகா மந்தனா.

