ஐம்பது விழுக்காடு இருக்கைகள் காரணமாகப் பல பெரிய தெலுங்குப் படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டன. குறிப்பாக
'ஆர்.ஆர்.ஆர்', 'ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் வெளிவரவில்லை. அதனால் 'பங்காராஜு' படத்திற்கு அடித்தது யோகம். துணிந்து படத்தை திரையரங்குகளில் வெளியிட்டனர். படக்குழுவினரின் எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை.
படம் வெளிவந்து மூன்று நாள்களில் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாகார்ஜுனா, நாக சைதன்யா இருவரது நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதாலும் போட்டிக்கு வேறு படங்கள் இல்லாத காரணத்தாலும் இந்தப் படம் தனித்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

