சாய்பல்லவி தேவதாசியாக நடித்துள்ள தெலுங்குப் படம் 'ஷியாம் சிங்கா ராய்'. இதில் நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இது பூர்வஜென்ம கதையாக உருவாகி உள்ளது. கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா மற்றும் அபினவ் கோமதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் தற்போது 'நெட்பிளிக்ஸ்' இணையத் தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகியுள்ளது.
'ஓடிடி'யில் ஷியாம் சிங்கா ராய்
1 mins read
-

