இந்தியில் கவனம் செலுத்தும் தனுஷ்

இந்தியில் கவனம் செலுத்தும் தனுஷ்

1 mins read
f9b9add7-df9e-42d3-9815-23c66c16d859
-
Google News Preferred Icon

நடிகர் தனுஷ் மேலும் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'ராஞ்சனா' படத்தின் மூலம் இந்தியில் கால்பதித்தார் தனுஷ். ஆனந்த் எல்.ராய் இயக்கிய படம் அது. அதன் பின்னர் அமிதாப் பச்சனுடன் 'ஷமிதாப்' என்ற படத்தில் நடித்தார் தனுஷ்.

மூன்றாவது படமாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், அவர் நடித்த 'அட்ரங்கி ரே' படம் அண்மையில் வெளியானது. இந்நிலையில், மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்திலேயே நடிக்க உள்ளார் தனுஷ். மேலும் ஒரு பெரிய நிறுவனம் தயாரிக்கும் இந்திப் படத்திலும் அவர்தான் நாயகனாம்.