அஜித்தின் 'வலிமை' படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளன.
அஜித்தின் அடுத்த படத்தை ஹெச்.வினோத் தான் இயக்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதி யாகிவிட்டது.
இந்நிலையில், இதில் வில்லன் வேடத்துக்கு பிரகாஷ்ராஜை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம் வினோத். இதற்கு அஜித்தும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தகவல். ஏற்கெனவே 'ஆசை', 'பரமசிவன்' உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அப்போது பிரகாஷ்ராஜ் வளர்ந்து வரும் வில்லன் நடிகராக இருந்தார்.
"படிப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வரமாட்டார். இயக்குநர்கள் சொல்வதைக் கேட்கமாட்டார் என்றெல்லாம் பிரகாஷ்ராஜ் மீது சில குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக உள்ளன. ஆனால் இப்போது அவர் மாறிவிட்டார்.
"தமக்கான பட வாய்ப்புகள் முன்பு போல் இல்லை. யாரும் தம்மை நடிக்க அழைப்பதில்லை என அண்மைய பேட்டியில் பிரகாஷ்ராஜ் கூறியிருந்தார். அதனால் அஜித் படத்துக்கு அவரால் எந்தச் சிக்கலும் எழாது," என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

