ஒரு பெண் குழந்தை பெற்றெடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல என்கிறார் சமந்தா.
இந்த உலகில் மிகப்பெரிய, தாங்க இயலாத வலி என்றால், அது பிரசவம்தான் என்றும் அண்மைய சமூக வலைத்தளப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"குழந்தையைப் பார்த்தவுடன் ஒரு பெண்ணுக்கு அவ ளது வலிகள் எல்லாம் மறந்தும் மறைந்தும் போகின்றன. முகத்தில் சிரிப்பும் மனதில் மகிழ்ச்சியும் உண்டாகிறது. இதற்கு ஈடு இணை இல்லை," என்கிறார் சமந்தா.
அவரது இந்தக் கருத்தைப் பலரும் வரவேற்றுள்ளனர். அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளதுடன், இப்படிப்பட்ட மென்மையான மனம் கொண்டவரா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர். முன்னதாக, சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவைப் பிரிந்ததற்கு, குழந்தை பெற்றுக் கொள்ள அவர் சம்மதிக்காததே முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது.
இதற்கிடையே தனது மகன் நாக சைதன்யா, சமந்தாவின் மணமுறிவு தொடர்பாக தாம் பல்வேறு தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படுவதை திட்ட வட்டமாக மறுத்துள்ளார் நடிகர் நாகார்ஜுனா. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் ரசிகர்களையும் நண்பர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
"நான் அறிக்கை மூலம் சில தகவல் களை வெளியிட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல. எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக, மின்னிலக்க ஊடகங்களில் வரும் செய்திகளும் முற்றிலும் தவறானவை. முட்டாள்தன மான வதந்திகளை செய்தியாக வெளி யிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்," என்று நாகார்ஜுனா கூறியுள்ளார்.
சமந்தா

