திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
2869a138-95b5-4e7e-a8f8-3f10bb8b7d90
-
multi-img1 of 2

 விஜய் ஆண்டனி அடுத்து நடிக்க உள்ள படம் 'ரத்தம்'. இந்தத் தலைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், விஜய் ஆண்டனியுடன் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என மூன்று

நாயகிகள் நடிக்க உள்ளனர். இது அரசியலை மையமாக வைத்து உருவாகும் படம் என்கிறார் இயக்குநர் அமுதன். அதனால் பரபரப்புக்கும் அடிதடிக் காட்சிகளுக்கும் குறைவே இருக்காது என இப்போதே உத்தரவாதம் அளிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் இளையர்களை வெகுவாகக் கவருமாம்.

 பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கும் அடுத்த படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல்.

'ஜனகணமன' என்ற படத்தை இயக்குகிறார் பூரி ஜெகன்னாத். இதில் வலுவான ஒரு கதா பாத்திரத்தில் ஜான்வியை நடிக்க வைக்க விரும்புகிறாராம். கதையைக் கேட்ட ஜான்விக்கு அது பிடித்துப் போகவே, நடிக்கச் சம்மதம் தெரிவித்துள் ளார். இதற்கிடையே தெலுங்கில் வெற்றிபெற்ற 'உப்பெனா' படத்தின் இயக்குநர் புச்சிபாபுவும் தனது அடுத்த படத்தில் ஜான்வியை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம்.

 நடிகை சாக்‌ஷி அகர்வால், தன் தந்தையின் கனவை நிறைவேற்றி இருப்பதாக சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள் ளார். வேறு ஒன்றுமில்லை, தன் மகள் சொகுசுக் கார் வாங்க வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் கனவாம். இந்நிலையில் புதிய பென்ஸ் கார் வாங்கியுள்ளார் சாக்‌ஷி. அந்தக் காருக்கு அருகே அவர் நிற்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.