15 கோடி ரூபாய் கேட்கும் இயக்குநர்கள்

15 கோடி ரூபாய் கேட்கும் இயக்குநர்கள்

1 mins read
4e19746e-9a00-4417-9801-3ea3b8836486
'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் வெங்கட் பிரபு, சிம்பு. -

'மாநாடு' வெற்றியைத் தொடர்ந்து சிம்பு மட்டுமல்ல, அதன் இயக்குநர் வெங்கட்பிரபுவும் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார்.

அவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் 'மன்மத லீலை'. இதில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார்.

'மாநாடு'க்­காக அவர் பெற்ற சம்­ப­ளம் ரூ.4 கோடி. ஆனால் கொரோனா நெருக்­க­டி­யால் தயா­ரிப்­பா­ளர்­கள் பாதிக்கப் பட்டுள்ளதால் திரை­யுலகத்தினர் சம்­ப­ளத்­தைக் குறைத்­துக் கொண்­டுள்­ள­னர். அந்த வகை­யில் வெங்­கட்­பி­ரபு ரூ.3 கோடி மட்­டுமே சம்­ப­ளம் பெற்­றுள்­ளார். இந்­நி­லை­யில் தெலுங்­குப் படம் ஒன்றை இயக்­கும் வாய்ப்பு அவ­ரைத் தேடி­வந்­தி­ருக்­கிறது. அதை ஏற்­றுக்­கொண்ட அவர் ரூ.15 கோடி சம்­ப­ளம் கேட்­டுள்­ளார். இதே­போல், முன்­னணி ஓடிடி நிறு­வ­னம் ஒன்று தங்­க­ளுக்­காக நேர­டித் தமிழ்ப் படம் ஒன்றை இயக்­கித் தர இயக்­கு­நர் பா.ரஞ்­சித்தை அணுக, அவ­ரும் சொல்லி வைத்­தாற்­போல் 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம்.