ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

ராஷ்மிகாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

1 mins read
1aa46642-4079-4e5c-a4ab-67c5c8be9666
-

உதவி கேட்ட சிறு­மி­யைக் கண்­டு­கொள்­ளாத ராஷ்­மிகா மந்­த­னாவை இணை­ய­வா­சி­கள் கடு­மை­யாக விமர்­சித்­துள்­ள­னர்.

'அழகு இருக்­கும் இடத்­தில் நல்ல குணம் இல்லை' என்று அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

அண்­மை­யில், படப்­பி­டிப்­புக்­காக மும்பை சென்­றி­ருந்­தார் ராஷ்­மிகா. அங்கு தங்­கி­யி­ருந்த பெரிய விடு­தி­யில் இருந்து வெளியே வந்­த­போது, ஓர் ஏழைச் சிறுமி தமக்கு ஏதா­வது தரு­மாறு கைநீட்டி கேட்­டுள்­ளார். ராஷ்­மிகா அச்­சிறுமியைக் கண்­டு­கொள்­ள­வில்லை.

இந்­நி­லை­யில், அவ­ரது பாது­கா­வ­லர்­கள் அந்­தச் சிறு­மியை தள்ளி­விட்­டுள்­ள­னர். அதன்பிற­கும் அந்­தச் சிறுமி தமக்கு பசிப்­ப­தா­கச் சொல்லி கையை நீட்டி, ஏதா­வது சாப்­பிட கொடுக்­கு­மாறு கெஞ்ச, ராஷ்­மிகா சிரித்­த­ப­டியே தன் காரில் ஏறிச் செல்­கி­றார். இந்தக் காட்சியை யாரோ ஒருவர் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.