கடந்த இரண்டு மாதங்களில் கல்யாணி பிரியதர்ஷன் (படம்) நடிப்பில் நான்கு படங்கள் வெளியாகி உள்ளன.
கடந்த நவம்பர் 26ஆம் தேதி தமிழில் சிம்புவுடன் நடித்த 'மாநாடு', டிசம்பர் 3ஆம் தேதி மோகன்லாலின் 'மரைக்காயர்', ஜனவரி 21இல் பிரணவ் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த 'ஹிருதயம்', ஜனவரி 24ஆம் தேதி பிரித்விராஜ் ஜோடியாக நடித்த 'ப்ரோ டாடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார் கல்யாணி.
இதன் மூலம் முன்னணி நாயகிகளுக்கான பட்டியலில் அவரது பெயர் சில இடங்கள் முன்னேறி உள்ளது.
விக்ரம், அவரது மகன் துருவ் இணைந்து நடிக்துள்ள 'மகான்' படத்தின் ஒற்றைப் பாடல் வெளியாகி உள்ளது. 'எவன்டா எனக்கு கஸ்டடி' எனத் தொடங்கும் அப்பாடலுக்கு இணையத்தில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சாந்தனு நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஹன்சிகா, ஜனனி என அவருக்கு இரண்டு கதாநாயகிகள். படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
யோகிபாபு (படம்) நடித்துள்ள 'பன்னிக்குட்டி' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரேவற்பு கிடைத்துள்ளது. படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளனர். 'கிருமி' பட இயக்குநர் அனு சரண் முருகையன் இயக்கும் இந்தப் படத்தில் கருணாகரனும் நடித்துள்ளார்.
எதிர்வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவுக்குப் பிறந்தநாள். இதையொட்டி, அவர் தனது திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. சிம்பு தரப்பு உறுதி செய்யாமலேயே, இத்தகவலை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இளம் நாயகி நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. அவர் அதை மறுக்கவில்லை என்பதை ஒருதரப்பினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

