கமல்ஹாசனைப் போலவே பன்முகத் திறமைகொண்டவர் நடிகை ஷ்ருதிஹாசன். இவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்காவிட்டாலும் வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக செயல்படுவார். இவர் தன்னுடைய 36வது பிறந்தநாளை ஜனவரி 28ஆம் தேதி கொண்டாடினார். அன்று முதல் அவர் தன்னுடைய ரசிகர்களுடன் நேரலையில் சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி பேசி வருகிறார்.
அவருடைய பிறந்தநாளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் பாச மழையில் மூழ்கி இருக்கும் ஷ்ருதி, நேரலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்
அளிப்பதுடன், நம் சமூகத்தில் பேச மறுக்கப்படும் விசயங்களை பற்றி உரையாடல்களை நடத்தி, நமது அன்றாட வாழ்க்கையில் இந்த உரையாடல்களை இயல்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய இந்த
முயற்சிக்கு பல பிரபலங்கள் வாழ்த்து
தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபாஸுடன் 'சலார்' படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் ஷ்ருதிஹாசன். படத்தைப் பற்றி பேசுகையில், "சலார்' படத்தின் கதை அற்புதமானது, அதில் என்னுடைய கதாபாத்திரம்
மிகவும் சுவாரசியமானது. இப்போதைக்கு இதைத்தான் சொல்ல
முடியும். இயக்குநர் பிரஷாந்தின் இயக்கம் வித்தியாசமானது.
"பிரபாஸ் மிகவும் அற்புதமான மனிதர். அடுத்து அவர் ஒரு சிறந்த சாப்பாட்டுப் பிரியர். நான் பார்த்ததிலேயே இந்த அளவிற்கு சாப்பாட்டின் மீது பாசம் கொண்டவர் இவராகத்தான் இருக்கும். தினமும் மற்றவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்று விரும்புவார். உணவு மூலம் அன்பைப் பரிமாறுபவர். அவரது உணவு முறை வித்தியாசமான, அதிசயமான, ஆபூர்வமான ஒன்று," என்று தன் சக நடிகரைப் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.
ஷ்ருதியின் பிறந்த நாளையொட்டி 'சலார்' படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், ஷ்ருதியின் தோற்றத்தையும் கதாபாத்திரத்தின் பெயர் ஆத்யா என்றும் வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் படம் கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. தமிழ், மலையாளம், இந்தியில்
மறுபதிப்பு செய்யப்படுகிறது. புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 'ஹோம்பலே பிலிம்ஸ்' சார்பில் விஜய்
கிரகந்தூர் தயாரிக்கிறார்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 'ஓடிடி'
நிறுவனங்கள் ரசிகர்களிடம் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளன. 'ஓடிடி'யில் புதிய படங்களை நேரடியாக வெளியீடு செய்து புதிய ரசிகர்களை, சந்தாதாரர்களை 'ஓடிடி' நிறுவனங்கள் பெற்று வருகின்றன. இதனால், இந்திய மொழிகளில் புதிது புதிதாக இணையத் தொடர்
களைத் தயாரித்து வெளியிடும்
முயற்சியில் அவை இறங்கியுள்ளன.
சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்த இணையத் தொடர்கள் 'ஓடிடி' தளங்களில் வெளியாகியுள்ளன. அவர்களது வரிசையில் தற்போது ஷ்ருதிஹாசனும் இணைந்துள்ளார். 'பெஸ்ட் செல்லர்' என்ற இணையத் தொடரில் நடித்திருக்கிறார். இணையத் தொடரில் நடிப்பது இதுவே முதல் முறை என்கிறார் அவர். இத்தொடர் பிப்ரவரி 18ஆம் தேதி அமேசான் 'ஓடிடி' தளத்தில் வெளியாகிறது.
ஷ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரைக் காதலித்து வந்தார். இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019ஆம் ஆண்டு பிரிந்தனர். அப்போது "வெவ்வேறு
நாட்டில் இருப்பதால் எங்களால் காதலைத் தொடர முடியவில்லை," என்று மைக்கேல் விளக்கமளித்திருந்தார்.
தற்பொழுது ஷ்ருதிஹாசன் டெல்லியைச் சேர்ந்த சாந்தனு என்ற 'டூடுல்' கலைஞரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த 'டூடுல்' கலைப் போட்டியில் சிறந்த கலைஞராக தேர்வு
செய்யப்பட்டார்.
நடிகை ஷ்ருதிஹாசனுக்கு பிறமொழி பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தமிழ் ரசிகர்களைக் கவரும் விதமாக
படங்கள் எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்
படங்கள் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் பரவலாகப் பகிரப்பட்டு
வருகின்றன.

