பிரபல இயக்குநர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதிகளின் வாரிசான கல்யாணி பிரியதர்ஷன் தற்போது
வளர்ந்துவரும் நடிகைகளுள்
ஒருவராக இருக்கிறார்.
அண்மையில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'மாநாடு' படத்திலும் அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படமான 'மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம்' திரைப்படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றன.
தொடர்ந்து நடிகர் பிரணவ் மோகன்லாலுக்கு கல்யாணி ஜோடியாக நடித்திருந்த 'ஹிருதயம்' படமும்
வெற்றிப்படமானது.
'ப்ரோ டாடி' திரைப்படத்திலும் இவர் நடிகர் பிரித்விராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் 'ஓடிடி'யில் வெளியானது. இதிலும் கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பு பாராட்டைப் பெற்றிருக்கிறது.
தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து 'வான்' திரைப்
படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தம்
செய்யப்பட்டு இருக்கிறார்.
அசுரவளர்ச்சி அடைந்து வரும் கல்யாணி பிரியதர்ஷனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

