நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்
படங்கள் அவ்வப்போது வெளிவரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள திரைப்படங்களில் ஒன்று 'கடைசி
விவசாயி'. இந்தப் படம் கடந்த 2021ஆம் ஆண்டில் வெளியாக வேண்டிய நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக வெளியீடு தள்ளிப் போனது.
இந்நிலையில் 'கடைசி விவசாயி' திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
நல்லாண்டி என்பவர் விவசாயி வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்
படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

