போதையில் நடந்த சண்டை விவாகரத்தில் முடிந்தது

போதையில் நடந்த சண்டை விவாகரத்தில் முடிந்தது

2 mins read
ce2f9574-cb74-4398-bd76-05132c9512af
-

ஹைத­ரா­பாத்­துக்கு சென்ற தனு­ஷும் ஐஸ்­வர்­யா­வும் ஜன­வரி 16ஆம் தேதி இரவு விருந்து ஒன்­றில் கலந்­து­கொண்டு மது அருந்­தி, வாய்த் தக­ராறு முற்­றி­யதால் அரசல் புரசலாக இருந்த விவகாரம் விவாகரத்து வரை சென்றுவிட்டது என்கின்றனர் விருந்தில் கலந்துகொண்டவர்கள்.

அன்று இரவு பிர­ப­லம் ஒரு­வர் அவர்­க­ளு­டன் பேச்­சு­ வார்த்தை நடத்த முயற்சி செய்ய தனு­ஷும் ஐஸ்­வர்­யா­வும் சண்டை போடத் துவங்­கி இருக்கிறார்கள்.

அதன் பிறகு அவர்­கள் தங்­கள் அறை­க­ளுக்கு சென்­றி­ருக்­கி­றார்­கள். அங்கும் ஐஸ்­வர்யா தனு­ஷை கைத்­தொ­லை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு வாக்­கு­வா­தத்­தைத் தொடர்ந்­தி­ருக்­கி­றார். அப்­பொ­ழுதுதான் பிரி­வது என்று முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

மறு­நாள் தனுஷ் ஐஸ்­வர்­யா­வி­டம், "நேற்று இரவு பேசி­யது எல்­லாம் உண்­மை­தானே," என்று கேட்­டா­ராம். அதற்கு ஐஸ்­வர்­யாவும் "ஆமாம். இனி­யும் உங்­க­ளு­டன் சேர்ந்து வாழ முடி­யாது," என்று தெரி­வித்­தா­ராம்.

அதன் பிறகே தனுஷ் பிரிவு குறித்து டுவிட்­ட­ரில் பதி­வு­செய்ய, ஐஸ்­வர்­யா­வும் இன்ஸ்­ட­கி­ரா­மில் பதிவு போட்­டி­ருக்­கி­றார். தனு­ஷை­யும் ஐஸ்­வர்­யா­வை­யும் சேர்த்து வைக்க இரு வீட்­டா­ரும் தீவிர முயற்சி செய்து வரு­கி­றார்­கள்.

"நீ தனு­ஷு­டன்­தான் சேர்ந்து வாழ வேண்­டும்," என்று ஐஸ்­வர்­யா­வுக்கு உத்­த­ரவு போட்­டுள்­ளா­ராம் ரஜினி. இதற்­கி­டையே தன் கவ­னத்தைத் திசை திருப்ப அடுத்­த­டுத்து புதுப் படங்­களில் நடிக்க ஒப்­புக்­கொண்­டி­ருக்­கி­றார் தனுஷ்.

பாலி­வுட்­டில் இரண்டு படங்­களில் நடிக்­க­ இருக்­கி­றார். அதில் ஒன்று மிகப்­பெ­ரிய பொருள் செ­ல­வில் எடுக்கப்பட இருக்கிறதாம்.

'வலிமை' திரைப்­ப­டம் வரு­கின்ற பிப்­ர­வரி 24ஆம் தேதி திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­க­வுள்­ள­தாக செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

தமி­ழில் 'சூர­ரைப் போற்று' படத்தை இயக்­கிய சுதா கொங்­கரா இந்­தி­யி­லும் அதே படத்தை இயக்­க­வுள்ள நிலை­யில் சூர்­யா­வின் கதா­பாத்­தி­ரத்­தில் பிர­பல இந்தி நடி­கர் அக்­‌ஷய் குமார் நடிக்க இருக்­கி­றார்.

'புஷ்பா' படத்­தில் சமந்தா ஆடிய குத்­தாட்­டத்­தால் படம் மிகப்­பெ­ரிய அள­வில் வெற்றி பெற்­ற­தால் விஜய் நடிக்­கும் 'பீஸ்ட்' படத்­தி­லும் ஒரு

குத்­தாட்­டத்­தைச் சேர்க்க இருக்­கின்­ற­னர் படக்­கு­ழு­வி­னர்.