'என் முதுகில் குத்திவிட்டனர்'

'என் முதுகில் குத்திவிட்டனர்'

3 mins read
d5978c05-0e9d-4f1c-9314-afd234aa6bbd
-

இயக்­கு­நர் மிஷ்­கின் தன் முது­கில் குத்­து­வார் என்று தாம் கொஞ்­சம்­கூட எதிர்­பார்க்­க­வில்லை என்­கி­றார் விஷால்.

அவ­ரைப் போலவே மேலும் சில­ரும் விஷாலை ஏமாற்­றி­விட்­ட­தாக அவ­ரது தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.

"துப்­ப­றி­வா­ளன் படத்­தின் இரண்­டாம் பாகத்­துக்­காக மிஷ்­கினை நம்பி நிறைய செலவு செய்­தேன். கிட்­டத்­தட்ட 13 கோடி ரூபாய் செல­விட்ட பிறகே என்­னால் தவறு நடப்­பதை உணர முடிந்­தது. அதன் பிறகு அப்­ப­டத்­தின் இயக்­கு­நர் பொறுப்­பை­யும் நான் ஏற்க வேண்­டி­யி­ருந்­தது.

"நான் தயா­ரிக்­கும் படங்­களில் ஏன் மற்ற நடி­கர்­கள் இடம்­பெ­று­வ­தில்லை என்று கேட்­கி­றார்­கள். மிஷ்­கின் போன்­ற­வர்­கள் என் முது­கில் குத்­தி­ய­தால் நான் என் மன­தில் போட்டு வைத்­து இ­ருந்த பல திட்­டங்­களை முழு­வ­தும் மாற்றி அமைக்க வேண்­டி­யி­ருந்­தது," என்­கி­றார் விஷால்.

இந்­நி­லை­யில், இவர் நடித்­துள்ள 'வீரமே வாகை சூடும்' படம் பிப்­ர­வரி 4ஆம் தேதி வெளி­யீடு காண்­கிறது. இந்­தப் படத்தை சர­வ­ணன் இயக்கி உள்­ளார்.

"இந்­தப் படம் எல்லாத் தரப்பு ரசி­கர்­க­ளை­யும் சென்­ற­டை­யும். கிட்­டத்­தட்ட நான் நடித்த 'பாண்­டி­ய­நாடு' படம் போல் இருக்­கும். இதி­லும் நானும் வில்­ல­னும் படத்­தின் இறு­திக்­காட்­சி­யில்­தான் சந்­திப்­போம். ஒரு படம் வெற்றி அடை­வ­தற்­கான அனைத்து அம்­சங்­களும் உள்­ளன.

"மூன்று வெவ்­வேறு கதைக்­களங்­கள் நேர்கோட்டில் பயணம் செல்லும் நிலை­யில், திடீ­ரென ஒரு மையப்­புள்­ளி­யில் சந்­திக்­கின்­றன. அது­தான் இந்­தப் படத்­துக்­கான துருப்­புச்­சீட்டு. தூத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்­டம் குறித்துப் பேசி­யி­ருக்­கி­றோம்," என்­கி­றார் விஷால்.

அண்­மை­யில் வெளி­யீடு கண்ட 'அத்ரங்கி ரே' இந்­திப் படத்­தில் நடித்த டிம்­பிள் ஹயாத்தி இந்­தப் படத்­தின் நாயகி. மேலும், ரவீனா ரவி, மாரி­முத்து, யோகி பாபு, துளசி உள்­ளிட்­டோர் முக்­கியக் கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்க, பாபு­ராஜ் வில்­ல­னாக நடித்­துள்­ளார்.

"பா.சர­வ­ணன் இயக்­கிய குறும்­படத்­தைப் பார்த்து அசந்துபோனேன். அவ­ரி­டம் நாம் மதிக்க வேண்­டிய ஒரு­வித முதிர்ச்சி இருக்­கிறது. திரைப்­படம் இயக்க வாய்ப்பு என்­ற­தும் முத­லில் பயந்துபோனார். ஆனால், 'வீரமே வாகை சூடும்' படத்­துக்­கான கதை, திரைக்­கதை என அனைத்­து­ட­னும் அவர் தயா­ராக வந்­த­போது, மீண்­டும் அவ­ரைக் கண்டு வியந்­தேன். குறிப்­பாக, அவர் திரைக்­கதை அமைத்­தி­ருந்த விதம் என்­னைக் கவர்ந்­தது," என்று சொல்­லும் விஷால், தயா­ரிப்­பா­ள­ராக இருப்­ப­து­தான் தமக்­குள் இருக்­கும் நடி­க­னை­யும் உயிர்ப்­பு­டன் வைத்­தி­ருக்க உத­வு­கிறது என்­கி­றார்.

கடந்த 17 ஆண்­டு­க­ளாக தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறு­வ­னத்­தின் மூலம் படங்­களை தயா­ரித்து வரு­வதே பெரும் சாத­னை­தான் என்று குறிப்­பி­டு­ப­வர், இதன் மூலம் தனக்கு ஏற்ற கதை­க­ளைத் தேர்வு செய்­யும் சுதந்­தி­ரம் கிடைக்­கிறது என்­கி­றார்.

மேலும் கொரோனா தொற்று உச்­சத்­தில் இருந்­த­போ­தும்­கூட, படப்­பி­டிப்பை நடத்த முடிந்­தது என்­றால் அதற்கு தாம் தயா­ரிப்­பா­ள­ராக இருப்­பதே முதன்மை கார­ணம் என்று கூறு­ப­வர், கடந்த ஆண்டு மே மாதம் ஹைத­ரா­பாத்­தில் தொடங்­கிய 'வீரமே வாகை சூடும்' படப்­பி­டிப்பு செப்­டம்­பர் மாதம் முடி­வுக்கு வந்­ததைச் சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

'இரும்­புத்­திரை' படம் வெளி­யான பிறகு விஷா­லின் திரைப்­பயணம் மற்­றொரு மைல்­கல்லை எட்­டிப்­பிடித்­துள்­ளது என­லாம்.

இந்­தப் படத்­தின் வெற்­றி­யானது நடி­க­ராக மட்­டு­மல்­லா­மல், ஒரு தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் இவ­ருக்குத் திரை­யு­ல­கில் மதிப்பை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தது.

அறி­முக இயக்­கு­ந­ராக பி.எஸ்.மித்­ரன் அந்­தப் படத்­தில் தனி முத்­திரை பதித்­தி­ருந்­தார். அதன் பிறகு அனு­பவ இயக்­கு­நர்­க­ளின் இயக்­கத்­தில் ஒரு படம், பின்­னர் ஓர் அறி­முக இயக்­கு­ந­ருக்கு வாய்ப்பு என்று கொள்கை முடிவு எடுத்து நடித்து வரு­கி­றார் விஷால்.

"நானும் உதவி இயக்­கு­ந­ராகப் பணி­யாற்­றி­ய­வன். கடும் பிரச்­சினை­க­ளுக்கு இடையி­லும் சினிமா மீதான அவர்­க­ளின் காத­லும் சாதிக்க வேண்­டும் என்ற வேட்­கை­யும் குறைந்­ததே இல்லை. அத­னால், சிறந்த படைப்பை உரு­வாக்க வேண்­டும் என்­ப­தில் இருந்து ஒரு விழுக்­காடுகூட பின்­வாங்க மாட்­டார்­கள். அவர்­க­ளுக்கு வாய்ப்பு கொடுப்­பது என்­பது எனது திரைப்­ ப­ய­ணத்­தை­யும் முன்­னெ­டுத்­துச் செல்­லும் என்­ப­து­தான் உண்மை," என்கிறார் விஷால்.