மலையாளத்தில் வெற்றி பெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' என்ற படத்தை தமிழில் மறுபதிப்பு செய்ய உள்ளனர். லால் இயக்கிய அந்தப் படத்தில் மலையாள நடிகர்கள் பிருத்விராஜும் சூரஜும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருந்தனர்.
இந்நிலையில், அதன் தமிழ்ப் பதிப்பில் நாயகனாக சிம்பு நடிப்பது உறுதியாகி உள்ளது. அவர் நடித்த 'வாலு' படத்தை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்குகிறார்.
சிம்புவுடன் மோதும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டு எஸ்.ஜே.சூர்யாவை அணுகியுள்ளனராம். 'மாநாடு' படத்தின் வெற்றியை அடுத்து, இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் படம் வெற்றிபெறும் என்று தயாரிப்புத் தரப்பு கருதுகிறதாம்.
ஒருவேளை எஸ்.ஜே.சூர்யா கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால், சிம்புவின் நெருங்கிய நண்பரான நடிகர் ஜெய்யை ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்.
சிம்புவும் இந்த ஏற்பாட்டுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாராம்.

