புதிய படம் ஒன்றில் கண் பார்வையற்றவராக நடிக்கிறார் நிவேதா பெத்துராஜ்.
இதுபோன்ற கதாபாத்திரங்களுக்காக தாம் நீண்ட நாள்களாக காத்திருப்பதாகவும் இப்போது இந்த விருப்பம் நிறைவேறி உள்ளது என்றும் இவர் கூறியுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் 'ஆஹா' என்ற பெயரில் ஓடிடி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அந்நிறுவனம் தயாரிக்கும் திகிலும் விறுவிறுப்பும் நிறைந்த படத்தில் நிவேதாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.
கதைப்படி, தனது உறவுகளுக்கு ஆபத்து நேர இருப்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் கண் பார்வையற்ற இளம் பெண், அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். அப்போது அவர் எதிர்கொள்ளும் சவால்களும் ஆபத்துகளும்தான் கதையாம்.
"நல்ல கதைக்களம் உள்ள படங்களில் சில நல்ல கதாபாத்திரங்களை ஏற்றுள்ளேன். எனினும், இப் புதிய படம் சவாலான கதைக்களத்துடன் உருவாகிறது. அந்த ஒரு காரணத்துக்காகவே இதில் நடிக்க சம்மதித்தேன்," என்கிறார் நிவேதா.

