இயக்குநர் சங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் முதல்வராக நடிக்கிறார் ராம்சரண்.
இந்நிலையில் முதல்வரைப் பேட்டி காணும் செய்தியாளர் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டு ராஷ்மிகா மந்தனாவை அணுகிஉள்ளனர். ஒன்றிரண்டு நாள்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்றும் சில மணி நேரம் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றும் தயாரிப்பாளர் தரப்பு கூறியதாம்.
அதைக்கேட்ட ராஷ்மிகா, கால்ஷீட் ஒதுக்குவதில் பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார். எனினும் இந்தச் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் கேட்ட தொகை ஒரு கோடி ரூபாய். இதைக்கேட்டு தயாரிப்புத் தரப்பு அதிர்ச்சி அடைந்த போதிலும், பிறகு வேறு வழியின்றி அவர் கேட்ட தொகைக்கு ஒப்புக்கொண்டதாம்.
ராஷ்மிகா நடித்து அண்மையில் வெளியீடு கண்ட 'புஷ்பா' படத்தின் வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. இதையடுத்து, இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த அவர், இப்போது நான்கு கோடி ரூபாயாக சம்பளத்தை உயர்த்திவிட்டார்.
தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே இப்போது விஜய்யுடன் தமிழில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் ஒரு படத்துக்கு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.

