'வெத்துவேட்டு' படத்தை இயக்கிய மணிபாரதியின் அடுத்த படம் 'தி பெட்'. இதில் ஸ்ரீகாந்தும் சிருஷ்டி டாங்கேவும் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.
படத்தின் கதையைக் கேட்டபோது ஏதாவது சர்ச்சை வெடிக்குமோ என்று தயங்கினாராம் ஸ்ரீகாந்த். பிறகு இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து நடித்தாராம்.
"சில பேர் கதை சொல்லும்போது காட்சிகளையும் விவரிப்பார்கள். ஆனால் படப்பிடிப்பின்போது எல்லாமே மாறி இருக்கும். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பின்னர் அதிலிருந்து பின்வாங்கவும் முடியாது. அப்படிச் செய்தால் வேறு சிலருடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து விடுவார்கள்," என்றார் ஸ்ரீகாந்த்.
கால்ஷீட், படப்பிடிப்பு குறித்துப் பேசியதாலோ என்னவோ, சிம்பு குறித்தும் ஓரிரு நிமிடங்கள் பேசினார்.
"எல்லோருக்கும் சிம்பு மாதிரி தைரியம் இருக்காது. ஏனென்றால் பல பேர் சிம்புவை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.
"ஆனால், அவர் அற்புதமான மனிதர். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு தன்னை முழுமையாக இயக்குநரிடம் ஒப்படைத்து விடுவார்," என்றார் ஸ்ரீகாந்த்.

