மீண்டும் முழு வேகத்துடன் நடிக்கத் தொடங்கி உள்ளார் வடிவேலு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்துக்காக ஒரு பாடலைப் பாடி உள்ளார். இது தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கும் அளவுக்கு சிறப்பான பாடலாக உருவாகி உள்ளதாகத் தகவல்.
இதற்கிடையே, 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் மற்றொரு பாடல் காட்சிக்கு நடனம் அமைக்க பிரபுதேவாவை அணுகி உள்ளனர். ஏற்கெனவே பிரபுதேவாவும் வடிவேலுவும் 'காதலன்' படத்தில் 'பேட்ட ராப்' பாடலுக்கு இணைந்து நடனமாடி உள்ளனர்.
இந்நிலையில், ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் அமைக்க முடியுமா என்று தயாரிப்பாளர் கேட்க, ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார் பிரபுதேவா.
தயாரிப்புத் தரப்பு அசரவில்லை. பிரபுதேவா கேட்ட தொகையை தருவதாகச் சொன்னதை அடுத்து, விரைவில் சென்னையில் அந்தப் பாடலை படமாக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

