கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து காஜல் அகர்வால் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவல்கள் பலராலும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
"இந்த வாழ்க்கையில், என் உடலில் என் வீட்டில் மிக குறிப்பாக என்னுடைய பணியிடத்தில் நிறைய மாற்றங்களை சமீபமாக நான் சந்தித்து வருகிறேன். கூடவே, பயனற்ற சில கருத்துக்கள், உடல் உருவக் கேலி பதிவுகள் என அனைத்தும் என்னைச் சுற்றி உள்ளன.
கர்ப்பிணிகள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இயற்கையானவை. நமது வாழ்வில் புதிதாக ஒன்று இணைய உள்ளதற்கு நாம் போராடுகிறோம். இதில் அசாதாரணமாக உணர எதுவுமில்லை,
"நாம் ஒரு பெட்டிக்குள் நம்மை சுருக்கிக் கொண்டு, ஒரே மாதிரியாக வாழ வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாழ்வின் அழகான, பிரமிப்பான, அற்புதமான கட்டத்தில் இருக்கும்போது, மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடக் கூடாது.
"குழந்தை பெற்றெடுப்பதில் உள்ள நிலைகளை நினைவில் கொள்வோம். அவற்றை அனுபவிக்கும் வகையில் நாம் கொடுத்து வைத்தவர்கள்," என்று குறிப்பிட்டுள்ளார் காஜல் அகர்வால்.
அவரது இந்த பதிவுக்கு ஏராளமான ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

