இளையராஜாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'ராக் வித் ராஜா' என்ற தலைப்பில் நடைபெற உள்ள அந்த நிகழ்ச்சியில் முன்னணி பாடகர்கள் பங்கேற்க உள்ளனர்.
கொரோனா நெருக்கடி காரண மாக சென்னையிலும் சிங்கப்பூரிலும் நடைபெற இருந்த இளையராஜாவின் இன்னிசைக் கச்சேரிகள் தடைபட்டன. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் குறைந்து இருப்பதை அடுத்து இளையராஜாவின் சென்னை நிகழ்ச்சி முதலில் நடைபெற உள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் மேலதிக தகவல்கள் விரை வில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, பார்த்திபன் இயக்கத்தில் உருவான 'ஒத்த செருப்பு' திரைப் படம் இந்தியில் மறுபதிப்பாகிறது. இதற்கு இளையராஜா இசையமைக்கும் தகவலை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காத லிப்பதாக கோடம்பாக்க வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருவரும் 'தேவராட்டம்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் குடும்பத்தார் சம்மதத்துக்காகக் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. சில நண்பர்களுக்கு மட்டுமே இதுகுறித்து தெரியுமாம்.
இந்நிலையில், இரு வீட்டாரும் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

