'ஸ்ரீதேவி வீட்டுப் பொண்ணு'

'ஸ்ரீதேவி வீட்டுப் பொண்ணு'

2 mins read
7d04955e-0535-40cf-a352-fb5284c7bba0
-

தமிழ்த் திரை­யு­ல­கத்­தில் தின­மும் ஒரு புது­முக நடி­கர் அல்­லது நடிகை அறி­மு­க­மாகி வரு­கி­றார்­கள். அந்­தப் பட்­டி­ய­லில் இணைந்­துள்­ளார் மறைந்த நடிகை ஸ்ரீதே­வி­யின் உற­வுப் பெண்­ணான ஸ்ரீஷா.

'காதல் எங்கே' என்ற தலைப்­பில் வெளி­யான இசைத்­தொ­குப்­பின் மூலம் இளை­ஞர்­க­ளின் தூக்­கத்­தைக் கெடுத்­த­வர்.

தமி­ழில் 'இரை' என்ற தலைப்­பில் தயா­ரா­கும் இணை­யத்­தொ­ட­ரில் ஸ்ரீஷாதான் நாயகி. இது தவிர தலைப்பு வைக்­கப்­ப­டாத ஒரு தமிழ்ப் படத்­தி­லும் ஒப்­பந்­த­மாகி உள்­ளா­ராம்.

சென்­னை­யில் பள்­ளிப்­ப­டிப்பை முடித்­த­வர், பின்­னர் மேற்­ப­டிப்­புக்­காக பெங்­களூருக்குச் செல்ல இருந்த வேளை­யில், சென்னை கல்­லூ­ரி­யி­லேயே இடம் கிடைக்க, பெற்­றோர் வெளி­யூர் போக­வேண்­டாம் எனக் கூறி­விட்­ட­னர்.

"என் அப்பா ஓய்­வு­பெற்ற அரசு ஊழியர். அண்­ணன் சொந்த நிறு­வ­னம் நடத்தி வரு­கி­றார். என் அம்மா வழி தாத்­தா­வும் அத்தை ஸ்ரீதே­வி­யின் அம்­மா­வும் ஒன்­று­விட்ட சகோ­தர, சகோ­தரி ஆவர். சிறு வயது முதல் ஸ்ரீதேவி அத்­தை­யைப் பார்த்து வளர்ந்­த­­தால் இயல்­பா­கவே எனக்­கும் திரை­யு­ல­கம், நடிப்­பின் மீது ஒரு­வித ஈர்ப்பு ஏற்­பட்டு­விட்­டது.

"ஸ்ரீதேவி அத்­தை­யின் புக­ழும் அவ­ரது வளர்ச்­சி­யும் என்­னைப் பிர­மிக்க வைத்த தரு­ணத்­தில்­தான் திரைப்­பட நடி­கை­யாக வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தேன்," என்­கி­றார் ஸ்ரீஷா.

கல்­லூ­ரி­யில் தொழில்­நுட்­பம் சார்ந்த படிப்பை முடித்­த­வ­ருக்கு தொலைக்­காட்சி, வானொலி, இணை­யம் என எல்லா தளங்­க­ளி­லும் உள்ள தொழில்­நுட்ப அம்சங்கள் அனைத்­தும் தெரிந்­தி­ருக்­கிறது.

"தொழில்­நுட்­பங்­க­ளை அறிந்துகொண்­டால் நடிப்­ப­தற்கு உத­வி­யாக இருக்­கும் என நினைத்துப் படித்தேன். சில வாய்ப்­பு­கள் தேடி­வந்­த­போது வீட்­டில் பெரி­தாக எதிர்ப்பு ஏதும் இல்லை. மேலும், அப்பா, அம்­மா­வுக்கு நான் நடி­கை­யாக மாறி­ய­தில் ஆச்­ச­ரி­ய­மும் இல்லை. அத்தை பெரிய நடிகை என்­ப­தால், அவர் வழி­யில் நானும் திரைப்­பட நடி­கை­யா­வேன் என்று அப்­பா­வும் ஏற்­கெ­னவே கணித்து வைத்­தி­ருந்­தா­ராம்.

"கடந்த 2018ஆம் ஆண்டு 'மிஸ் தமிழ்­நாடு' அழகி­யாக தேர்வு பெற்­ற­தும் என் எதிர்­கா­லத்­துக்­கான வாசல் திறந்­து­விட்­ட­தாக உணர்ந்­தேன். எனக்கு மேடை­யில் சூட்­டப்­பட்ட அழ­கிக்­கான கிரீ­டத்தை வீட்டுக்­குக் கொண்டு வந்து காண்­பித்­த­தும், 'சரி, ஏதோ ஆசைப்­ப­டு­கி­றாய், முயற்சி செய்' என்று திரை­யு­ல­கத்­தில் அறி­மு­க­மாக பெற்­றோர் சம்­ம­தித்­த­னர்," என்று உற்­சா­கத்­து­டன் நடந்­ததை விவ­ரிக்­கி­றார் ஸ்ரீஷா.

சினி­மா­வில் நடிக்க வேண்­டும் என்ற ஆசையை தன் அத்தை ஸ்ரீதே­வி­யி­ட­மும் இவர் சொல்லி இருக்­கி­றார். ஆனால் ஸ்ரீதே­வியோ, 'முத­லில் படிப்பு.... பிற­கு­தான் நடிப்பு' என்று அறி­வு­றுத்­தி­னா­ராம்.

"எனக்கு மட்­டு­மல்ல, பொது­வாக தன் மகள்­கள் உட்­பட அனை­வ­ருக்­குமே அத்தை சொல்­லும் அறி­வுரை இது­தான். உல­கின் எந்த மூலைக்­குச் சென்­றா­லும் படிப்பு நம்­மைக் கைவி­டாது என்று அடிக்­கடி சொல்­வார்.

"அவ­ரைத்­தான் எனது முன்­மா­தி­ரி­யா­கக் கரு­து­கி­றேன். எனவே அவர் சொன்­னதை வாழ்க்­கை­யில் கடைப்­பி­டிக்க விரும்­பி­னேன். அதைத்­தான் செய்­துள்­ளேன்," என்­கி­றார் ஸ்ரீஷா.

திரைப்­பட வாய்ப்­பு­க­ளுக்­காக மட்­டும் இவர் காத்­தி­ருப்­பது இல்லை. இணை­யத்­தொ­டர், காணொளி இசைத்­தொ­குப்­பு­கள் என மன­துக்­குப் பிடித்­தி­ருந்­தால் எதி­லும் நடிக்­கத் தயார் என்­கி­றார்.

ஸ்ரீஷா

, :   