இயக்குநர்: 'எஃப்ஐஆர்' படத்துக்கு தடைவிதிக்கப்படவில்லை

இயக்குநர்: 'எஃப்ஐஆர்' படத்துக்கு தடைவிதிக்கப்படவில்லை

1 mins read
2c519e02-376a-47d0-a82b-eb85abe5cbb9
'எஃப்ஐ­ஆர்' படத்தில் விஷ்ணு விஷால், ரெபா மோனிக்கா. -

விஷ்ணு விஷால் நடிப்­பில் உரு­வாகி உள்ள 'எஃப்ஐ­ஆர்' (FIR) படத்­துக்கு வெளி­நா­டு­களில் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­வந்த தக­வல் கோடம்­பாக்­கத்­தில் பர­பரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இது­கு­றித்து அப்­ப­டத்­தின் இயக்­கு­நர் மனு ஆனந்த் விளக்­கம் அளித்­துள்­ளார்.

ஒவ்­வொரு படத்­தி­லும் மாறு­பட்ட கதைக்­க­ளங்­க­ளா­கத் தேர்வு செய்து நடித்து வரு­கி­றார் விஷ்ணு விஷால். 'எஃப்ஐ­ஆர்' பட­மும் அப்­ப­டிப்­பட்ட படைப்­பா­கவே உரு­வாகி உள்­ள­தாக அவர் அண்மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார். மொத்­தம் 22 கோடி ரூபாய்க்கு படத்­தின் உரிமை விலை போயிருப்­ப­தா­கக் கூறப்­பட்ட நிலை­யில், ஒரு தயா­ரிப்­பா­ள­ராக தமக்கு இந்­தப் படம் லாபத்தை ஈட்­டித் தந்­துள்­ள­தாக விஷ்ணு விஷால் கூறி­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், இப்­ப­டத்­துக்கு மலே­சியா, குவைத், கத்­தார் ஆகிய நாடு­களில் தடை விதிக்­கப்­பட்­ட­தாக ஒரு தக­வல் வெளி­யா­னது. விஷ்­ணு­வும்­கூட தமது டுவிட்­டர் பக்­கத்­தில் 'மலே­சிய, குவைத் ரசி­கர்­கள்' என்று பதி­விட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், படத்­துக்குத் தடை என்­பது தவ­றான தக­வல் என்­கிறார் இயக்­கு­நர் மனு ஆனந்த்.

"எங்கள் படத்தை மலே­சியா, குவைத், கத்­தார் ஆகிய நாடு­களில் தடை செய்­ய­வில்லை. அங்­கெல்­லாம் இந்­தப் படத்தை இன்­னும் தணிக்கை செய்­ய­வில்லை.

"ஒரு­சில வார்த்­தை­கள் படத்தில் இடம்பெற்­றாலே அந்­தப் படத்தை அவர்­கள் தணிக்கை செய்­வ­தில்லை. இது­போன்ற நடை­மு­றை­கள் கார­ண­மா­கவே குறிப்­பிட்ட சில நாடு­களில் படம் இன்­னும் வெளி­யா­க­வில்லை," என்­கி­றார் மனு ஆனந்த்.

இப்படத்தில் கௌதம் மேனன், ரெபா மோனிக்கா, மஞ்சிமா மோகன், ரைசா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது 'எஃப்ஐ­ஆர்' படம்.