கிரிஷா: அன்பின் வகைகளைக் கண்டேன்

கிரிஷா: அன்பின் வகைகளைக் கண்டேன்

2 mins read
1e5530d6-d010-4130-8740-3f795dde13b9
கிரிஷா குருப் -

மும்­பை­யில் இருந்து கோடம்­பாக்­கத்­துக்கு நம்­பிக்­கை­யு­டன் வந்­தி­றங்கி உள்­ளார் கிரிஷா குருப். ஏற்­கெ­னவே தமி­ழில் 'ஷ்', 'கிளாப்' ஆகிய இரு படங்­களில் நடித்­துள்ள போதி­லும், தமக்கு எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் அமை­ய­வில்லை என்று ஆதங்­கப்­ப­டு­கி­றார் கிரிஷா.

இப்­போது வெற்­றி­யு­டன் இணைந்து 'ஜோதி' என்ற படத்­தில் நடிப்­ப­வர், கொரோனா நெருக்­கடி கிட்­டத்­தட்ட முடி­வுக்கு வந்­து­வி­டும் என்­ப­தால் தமக்­கான அடுத்­த­டுத்த வாய்ப்­பு­கள் தேடி வரும் என நம்­பு­கி­றா­ராம்.

'ஜோதி' படம் தமக்கு வாழ்க்­கை­யில் மறக்க முடி­யாத பல்­வேறு அனு­ப­வங்­க­ளைத் தந்­துள்­ள­தா­கக் குறிப்­பி­டும் கிரி­ஷா, முப்­பது வய­தைக் கடந்­த­வர் என்­றால் நம்ப முடி­ய­வில்லை.

'ஜோதி'யில் கதைப்­படி புதி­தாக திரு­ம­ண­மான இளம்­பெண்­ணாக நடிக்­கி­றார் கிரிஷா. படப்­பி­டிப்­புக்­குக் கிளம்­பும் முன்­னர், தனது தாயா­ரி­டம் அவ­ருக்­குத் திரு­ம­ண­மான புதி­தில் எவ்­வாறு உணர்ந்­தார் என்று கேட்­டா­ராம். ஆனால் அவர் சொன்ன அனு­ப­வங்­களில் ஒன்­று­கூட இன்­றைய இளம் பெண்­க­ளுக்­குப் பொருந்­தாது என்று சிரிக்­கி­றார். கிரி­ஷா­வைப் பார்த்­தால் கல்­லூரி மாண­வி­போல் தோன்­று­கிறது.

அன்­பர் தினத்­தை­யொட்டி அண்­மை­யில் அவர் அளித்த பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"திரை­யு­ல­கி­லும் அதற்கு வெளி­யே­யும் பலர் இப்­ப­டித்­தான் சொல்­கி­றார்­கள். 'ஜோதி' படப்­படிப்­புக்­காக நெய்­வேலி சென்­றி­ருந்­தோம். அங்­குள்ள ஒவ்­வொரு வீட்­டுக்­குள்­ளும் வெப்­பத்தை உணர முடி­கிறது. ஆனால் அதை­விட, அம்­மக்­க­ளின் பாசம் அனைத்­தை­யும் கடந்து நம்மை நெகிழ வைக்­கிறது.

"சின்­னச் சின்­னச் செய்­கை­க­ளின் மூல­மா­கக் கூட காத­லை­யும் அன்­பை­யும் நம்­மால் பகிர முடி­யும். நெய்­வேலி, அதன் சுற்று வட்­டா­ரப் பகு­தி­களில் சுற்­றித் திரிந்­த­போது இந்த உண்மை எனக்­குப் புரிந்­தது. ஒன்­றாக அமர்ந்து தேநீர் அருந்­து­வது, நாளேடு ப­டிப்­பது, வீட்டு வேலை­க­ளைச் செய்­வது என்று பல வகை­களில் காதலை வெளிப்­படுத்­த­வும் பகி­ர­வும் முடி­யும்.

"ஆனால் பர­ப­ரப்­பான வாழ்க்­கை­யில் இதை செய்ய மறக்­கி­றோம் என்­பது மட்­டு­மல்ல, இப்­படி வாழ்­ப­வர்­க­ளை­யும் கவ­னிக்­கத் தவ­றி­வி­டு­கி­றோம். என்­னைப் பொறுத்­த­வரை மன­மொத்த இரு­வர், அன்­பை­யும் காத­லை­யும் பரி­மா­றிக்­கொள்ள விரும்­பு­கி­ற­வர்­கள், தாங்­கள் இணைந்­தி­ருக்­கும் சில நொடி­கள் கூட வாழ்க்­கை­யின் பொக்­கி­ஷம் என்­ப­தை­யும் அதுவே உண்­மை­யான காதல் என்­ப­தை­யும் புரிந்­து­கொள்ள வேண்­டும்," என்­கி­றார் கிரிஷா.