அஜித்தின் புதுப்பட நாயகி

அஜித்தின் புதுப்பட நாயகி

1 mins read
339f70b7-2ca9-483f-bf19-9a51acb80f83
அதிதி ராவ் -

ஒரு­வ­ழி­யாக எச்.வினோத் இயக்­கத்­தில் உரு­வான 'வலிமை' படத்­தின் வெளி­யீட்டுத் தேதி அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. மேலும், அஜித்­தின் அடுத்த படத்­தை­யும் வினோத் தான் இயக்­கு­வார் என்­பது உறு­தி­யா­கி­விட்­டது.

இந்­நி­லை­யில், இப்­ப­டத்­தில் அதிதி ராவ் நாய­கி­யாக நடிக்க இருப்­ப­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது. தற்­போது தனு­ஷு­டன் இன்­னும் தலைப்பு வைக்­கப்­படாத படத்­தில் நடித்து வரு­கி­றார் அதிதி ராவ்.

அதன் படப்­பி­டிப்பு முடிந்­த­தும் 'அஜித் 61' படத்­தில் இணைய உள்­ளார். இதை­யடுத்து புதுப் படத்­துக்­கான வேலை­க­ளைத் தொடங்கி உள்­ளார் வினோத். மற்ற இயக்­கு­நர்­க­ளைப் பின்­பற்றி பெரிய தங்­கு­வி­டு­தி­யில் சில அறை­களை வாட­கைக்கு எடுத்து கதையை உரு­வாக்­கு­வ­தில் இவ­ருக்கு விருப்­பம் இல்­லை­யாம்.

காலை, மாலை, இரவு நேரங்­களில் நீண்­ட­தூர நடைப்­ப­ய­ணங்­களை மேற்­கொள்­கி­றார். அப்­போது தோன்­றும் யோச­னை­களை உட­ன­டி­யாக தமது கைபே­சி­யில் பதிவு செய்துகொள்­கி­றார். உதவி இயக்­கு­நர்­கள் இருந்­தா­லும், முன்­கூட்­டியே கதையை ஓர­ளவு தயார் செய்­த­ பின்­தான் கதை விவா­தத்­தையே தொடங்­கு­வா­ராம்.

படப்­பி­டிப்பை அடுத்த மாதம் தொடங்­க­லாம் என்று அஜித் பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­தா­கத் தக­வல்.