சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை பூஜா ஹெக்டே தனது குடும்பத்தாருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தன் பெற்றோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
"பல ஆண்டுகளாக நீடித்த ஏக்கம் தீர்ந்துள்ளது. சுற்றுலாவின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்துக் கொண்டிருக்கிறோம்," என்கிறார் பூஜா. இவரது நடிப்பில் அடுத்து 'பீஸ்ட்' படம் வெளியாகிறது.
மறைந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.
அனுபவ இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, சில ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான முயற்சியை தொடங்கியபோதும், அது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில், இயக்குநர் ஆனந்த் எல்.ராய், ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா ஆகியோர் லதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க முன்வந்துள்ளனர். இதற்காக அவரது குடும்பத்தினரின் அனுமதியைப் பெறுவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.
கார்த்தி நடித்துள்ள 'சர்தார்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடி தளத்திலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் 'ஆஹா' என்ற ஓடிடி நிறுவனம் இதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது. இப்படம் கணிச மான தொலைக்கு விலை போயிருப்பதாகத் தகவல்.
ஜெயம் ரவி நடித்து வரும் படத்துக்கு 'அகிலன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கல்யாண கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் எதிர்வரும் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பலத்த போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
, :

