சந்தீப் ராஜ்: கடும் வலியைப் பொறுத்துக்கொண்டார் சிம்பு

சந்தீப் ராஜ்: கடும் வலியைப் பொறுத்துக்கொண்டார் சிம்பு

2 mins read
54670989-79aa-4a42-b9f5-22d894fffa15
உடற்பயிற்சியாளர் சந்தீப் ராஜுடன் சிம்பு. -

உடல் எடை­யைக் குறைப்­ப­தற்­காக சிம்பு மேற்­கொண்ட தீவிர முயற்சி­கள் குறித்து அவ­ரது உடற்பயிற்சி­யா­ளர் சந்­தீப் ராஜ் பல சுவா­ரசி­ய­மான தக­வல்­க­ளைப் பகிர்ந்­துள்­ளார். இதை­ய­டுத்து ரசி­கர்­கள் சிம்புவை பாராட்­டித் தள்­ளு­கி­றார்கள்.

வெறும் உடற்­ப­யிற்­சி­யு­டன் நிற்­கா­மல், பர­த­நாட்­டி­ய­மும் கற்­றுக் கொண்­டா­ராம் சிம்பு.

உடல் பெருத்து, 105 கிலோ எடை­யு­டன் வலம் வந்த சிம்­பு­வுக்கு பட வாய்ப்­பு­கள் குறைந்­தன. கிடைத்த வாய்ப்­பு­களும் அவ­ருக்கு வெற்­றி­யைத் தர­வில்லை. இந்­நி­லை­யில் நண்­ப­ரும் நடி­க­ரு­மான மகத் மூல­மாக சந்­தீப் ராஜ் குறித்து சிம்பு­வுக்கு தெரி­ய­வந்­தது.

"முதன்­மு­த­லாக அவரை (சிம்பு) சந்­தித்­த­போது உடல் பெருத்­து­விட்­ட­தைச் சொல்லி மிக­வும் வருத்­தப்­பட்­டார். அதன் பிறகு பயிற்­சி­யைத் தொடங்­கி­ய­தும் அவ­ரது வேகம் எனக்கு வியப்­ப­ளித்­தது.

"இப்­ப­டித்­தான் செய்ய வேண்­டும் என்று ஒரு­முறை சொன்­னால் போதும், அதை சரி­யா­கப் பின்­பற்று­வார். 33 கிலோ எடை குறைப்­பது என்­பது எளி­தான ஒன்­றல்ல. இதற்­காக தாங்க முடி­யாத வலியைப் பொறுத்­துக் கொண்­டார் சிம்பு," என்­கி­றார் சந்­தீப் ராஜ்.

முதற்­கட்­ட­மாக எட்டு கிலோ எடை­யைக் குறைக்க முடிந்­த­தாம். தீவிர உடற் பயிற்சி செய்­யும்போது புகை­ப்பி­டிக்­கக் கூடாது என்­றும் மேலும் சில கட்­டுப்­பா­டு­களும் உள்­ளன என்­றும் குறிப்­பி­டும் சந்­தீ்ப், அவற்றை எல்­லாம் சிம்பு ஒரு­முறை­கூட மீறி­யதே கிடை­யாது என்­கிறார். 'கூடாது என்­றால் கூடாது­தான்' என்ற கொள்­கையை அவர் கடைசி வரை கடைப்­பி­டித்­தார் என்­றும் பாராட்­டு­கி­றார்.

"உடல் எடை 85 கிலோ­வா­கக் குறைந்த பின்­னர், நீச்­சல், கூடைப்­பந்து, பேட்­மின்­டன், டென்­னிஸ் போன்ற விளை­யாட்­டு­களில் ஈடு­பட்­டார். இப்­போது 'வெந்து தணிந்­தது காடு' படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருக்­கும் சிம்­பு­வின் உடல் எடை 72. ஏதோ ஒரு படத்­துக்­காக அவர் இவ்­வாறு எடை­யைக் குறைக்­க­வில்லை. தனது அன்றாட வாழ்க்கை முறையை மாற்­றி­அமைக்க விரும்­பி­னார் சிம்பு.

"ரசி­கர்­களிடம் விழிப்­பு­ணர்வு ஏற்­பட வேண்­டும் என்­ப­தால்­தான் இந்த ஒட்­டு­மொத்த எடை குறைப்பு பட­லத்­தை­யும் காணொ­ளி­யா­க வெளி­யிட்­டார். அதற்கு 'ஆத்­மன்' என்று தலைப்பு வைத்­த­தும் அவர்­தான். எது­வாக இருந்­தா­லும் அது நம் ஆத்­மா­வு­டன் தொடர்­பு­டை­யது என சிம்பு நம்­பு­கி­றார்," என்­கி­றார் சந்­தீப் ராஜ்.

இதற்­கி­டையே, நடிகை சரண்யா மோக­னி­டம் பரத நாட்­டி­யப் பயிற்சி­யும் பெற்­றுள்­ளார் சிம்பு. கடந்த 2020ஆம் ஆண்டு கேர­ளா­வுக்­குச் சென்­ற­போது பல் மருத்­து­வ­ரான சரண்யா மோக­னின் கண­வ­ரைச் சந்­தித்­துள்­ளார் சிம்பு.

அப்­போது கண­வ­ரைப் பார்க்க வந்த சரண்­யாவைக் கண்­ட­தும் அவ­ருக்கு ஆச்­ச­ரி­யம். பிறகு பரதம் கற்­றுக்கொள்ள விரும்­பு­வ­தா­க­வும் நல்ல ஆசி­ரி­யரை அறி­மு­கம் செய்­யும்­ப­டி­யும் சிம்பு கேட்­டுக்கொள்ள, தாமே கற்­றுத் தரு­வ­தா­கக் கூறினா­ராம் சரண்யா. பிறகு இரண்டு வாரங்­க­ளுக்கு அவர் நடனப் பயிற்சி பெற்­றுள்­ளார்.