'இது நம்ப இயலாத ஓர் உண்மைக்கதை'

1 mins read
040d6b1d-ebc0-408b-8542-10207e2e7c37
படப்பிடிப்பின்போது ரேவதியுடன் கஜோல். -

ரேவதி எப்­போது கள­மி­றங்­கு­வார், எப்­போது ஒதுங்கி நிற்­பார் என்­பதே தெரி­யாது. ஆனால் களம் கண்டால் அனைத்­தும் கச்­சி­த­மாக இருக்­கும். வெற்றி, தோல்வி பற்றி கவ­லைப்­படா­மல் தரத்தை மட்­டுமே முன்னி­றுத்­தும் படைப்­பா­ளி­களில் ரேவதிக்­கும் இட­முண்டு.

தற்­போது அவ­ரது இயக்­கத்­தில் கஜோல் நடிக்­கும் படம் 'சலாம் வெங்கி'. இதன் படப்­பி­டிப்பு தொடங்கிவிட்­ட­து.

கடந்த 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்­கிய 'மித்ர மை ஃப்ரெண்ட்' திரைப்­ப­டம் இந்­தி­யத் தேசிய விருதை வென்­றது. 2004ஆம் ஆண்டு இயக்­கிய 'ஃபிர் மிலேங்கே' திரைப்­ப­ட­மும் அவ­ருக்­குப் பாராட்டு ­க­ளைப் பெற்­றுத்தந்­தது.

இப்­போது அடுத்த முயற்­சி­யாக 'சலாம் வெங்கி' என்ற தலைப்­பு­டன் படப்­பி­டிப்பை தொடங்கி உள்­ளார் ரேவதி. இதில் கஜோல்­தான் நாயகி.

இப்­ப­டத்­துக்கு முத­லில் 'தி லாஸ்ட் ஹுர்ரா' என்று தலைப்­பிடப்­பட்­டி­ருந்­தது. ஆனால், ஒருசில கார­ணங்­க­ளால் தற்­போது மாற்­றம் கண்­டுள்­ளது.

கடந்த 11ஆம் தேதி படப்­பி­டிப்பு தொடங்­கிய விவ­ரத்தை தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் புகைப்­படத்­து­டன் கஜோல் பதிவிட, ஏரா­ள­மா­னோ­ரை அது கவர்ந்துள்ளது.

"இது சொல்­லப்­பட வேண்­டிய ஒரு கதை. தேர்வு செய்­யப்­ப­ட­ வேண்­டிய ஒரு பாதை. கொண்டாடப்­பட வேண்­டிய ஒரு வாழ்க்கை. இவை மூன்­றுக்­கும் தேவை­யா­ன ஒரு பய­ணத்தை நாங்­கள் தொடங்கு­கி­றோம். நம்ப இய­லாத இந்த உண்மைக் கதையை உங்­க­ளி­டம் பகிர்ந்­து­கொள்ள நாங்­கள் மிக­வும் ஆவ­லாக இருக்­கி­றோம்," என்று கஜோல் பதிவிட்டிருந்தார்.