நடிகர் ஆரி அர்ஜுனா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்
டுள்ளது. கடந்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்நிலையில் 'டி.என்.43' என்ற தலைப்பை அறிவித்துள்ளனர். மணிவர்மன் இயக்கும் இந்தப் படத்தில் ஆரிக்கு ஜோடியாக அஞ்சு குரியன் ஒப்பந்தமாகி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாகை சூடிய ஆரி, இந்த ஆண்டு தனது ரசிகர் களுக்கு இரண்டு வெற்றிப் படங்களையாவது தர வேண்டும் என விரும்புகிறாராம்.
விஜய் தேவரகொண்டாவு டன் 'அர்ஜுன்ரெட்டி' தெலுங்குப் படத்தில் அறிமுகமான ஷாலினி பாண்டேவுக்கு அதன் பிறகு பல பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அடுத்த வெற்றியை இன்னும் அவர் தொடவில்லை. இடையில் நடித்த சில தென்னிந்திய மொழிப் படங்களும் தோல்வி கண்டதால், இந்திப் பக்கம் ஒதுங்கிவிட்டார். தற்போது ரன்வீர் சிங்குடன் 'ஜயீஸ் பாய் ஜோர்தார்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட கவர்ச்சிப் படங்களை ஏராளமானோர் பார்வை யிட்டுள்ளனர். அதே வேளையில், "தேவையின்றி இவ்வாறு கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது அவசியம்தானா?" என்று பலர் பின்னூட்டமிட்டுள்ளனராம்.
'கடைசி விவசாயி' படம் விமர்சன ரீதியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்புத் தரப்புக்கு கடைசி நேரத்தில் எட்டு கோடி ரூபாய் கொடுத்து உதவி உள்ளார் விஜய் சேதுபதி.
இத்தனைக்கும் இந்தப் படத்தில் நடிக்க அவர் சம்பளம் ஏதும் பெறவில்லை. இந்நிலையில், எட்டு கோடி ரூபாய் இருந்தால் மட்டுமே படத்தை அறிவித்த தேதியில் வெளியிட முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சேதுபதி, தன் சொந்தப் பணத்தில் இருந்து இத்தொகையைக் கொடுத்து உதவினாராம். அதன் பிறகே படம் வெளியீடு கண்டுள்ளது. இதற்கிடையே, புதுப் படம் ஒன்றில் கார்த்தியுடன் மோதும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

