திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
4033d50a-31ee-4e68-8a3f-083f4b80b268
-
multi-img1 of 3

 அன்பர் தினத்தை ஒட்டி தனது காதலர் விக்னேஷ் சிவனுக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் நயன்தாரா.

தமிழ் சினிமா உலகில் நீண்ட நாள்களாக இந்தக் காதல் ஜோடி வலம் வருகிறது. காதலர் தினத்தன்று இருவரும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், அழகிய பூங்கொத்தின் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார் நயன்தாரா. அவர் விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து கொடுக்கும் காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள விக்னேஷ் சிவன், "அவள் வந்து பூங்கொத்து கொடுத்தது முதல் முறை தந்ததுபோல் இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

 மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களி லும் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். நந்தினி, மந்தாகினி தேவி என்ற இரண்டு முக்கிய கதா பாத்திரங்களில் அவர் நடித்துள்ளதாகத் தகவல்.

இந்நிலையில், ரஜினியின் 169வது படத்தில் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இப்படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யா ராய் பொருத்தமான ஜோடியாக இருப்பார் என்று இயக்குநர் தரப்பு கூற, அதை ஏற்றுக்கொண்ட தயாரிப்புத் தரப்பு, ஐஸ்வர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

 பல வெற்றிப் படங்களில் நடித்த மோகன், நீண்ட இடை வெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். இதில் கதையின் நாயகனாக அவர் நடிக்க, குஷ்புவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர்.

1980களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மோகன். அதேபோல் குஷ்புவும் அனைத்து நாயகர்களுடனும் நடித்த நாயகி என்று பெயரெடுத்தவர். எனினும் மோகனும் குஷ்புவும் தமிழ்ப் படம் எதிலும் இணைந்து நடித்ததில்லை. தெலுங்கில் மட்டும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்நிலையில், தமிழில் மோகனுடன் இணைந்து நடிக்க உள்ளார் குஷ்பு. இப்படத்தின் இயக்குநர் யார், என்ன மாதிரியான கதை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகக்கூடும்.

 'வலிமை' படத்தை தொடங்கியது முதல் பொருளாதார ரீதியாக தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார் அதன் தயாரிப்பாளர் போனி கபூர்.

அஜித் நடித்த படம் முதன்முறையாக இந்திய அளவில் வெளியீடு காண உள்ளது என்றும் அவரைப் போன்ற ஒரு அதீத அர்ப்பணிப்புள்ள நடிகரைக் காண்பது அரிது என்றும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். "அஜித் மிகவும் பணிவான, தன்னுடைய வேலைகளில் மிகவும் கவனமும் ஈடுபாடும் கொண்ட மனிதர். தாம் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் அவர் காதலிக்கிறார். அவரும் படக்குழுவினரும் கடுமையாக உழைத்துள்ளனர். அதனால் இந்தப் படம் அனைத்து தரப்பினரையும் கவரும்," என்கிறார் போனிகபூர்.