ரஜினி படத்துக்கு இசையமைத்தவர் காலமானார்

பாலிவுட் படங்களில் டிஸ்கோ பாடல்களுக்குப் பேர்போன இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்.

அவருக்கு வயது 69.

1980கள், 1990களில் டிஸ்கோ இசையை ஹிந்தி திரையுலகத்தில் பிரபலப்படுத்தியவர் பப்பி லஹரி.

அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிர் இழந்தார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறியது.

பல்வேறு நோய்களுக்காக ஒரு மாதமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த திரு பப்பி லஹரி திங்கள் அன்று வீடு திரும்பினார். ஆனால் செவ்வாய்க்கிழமை அவர் உடல்நிலை மீண்டும் மோசமானது.

தூக்கத்தில் மூச்சுதிணறல் ஏற்படும் நோய் அவரது மரணத்துக்குக் காரணமாகக் கூறப்பட்டது.

திரு பப்பி லஹரி இறுதிச்சடங்கு வியாழன் அன்று நடைபெறும் என்று கூறப்பட்டது.

டிஸ்கோ டான்சர், சல்தே சல்தே, ஷராபி, தனெதர், தி டர்ட்டி பிக்சர் உள்ளிட்ட திரைப்படங்களில் பல புகழ்பெற்ற பாடல்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.

அவற்றில் டிஸ்கோ டான்சர் பாடல்கள் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம்.

அதன் தமிழ் தழுவலான பாடும் வானம்பாடி, ரஜினிகாந்த் நடித்த தாய் வீடு, அபூர்வ சகோதரிகள் உள்ளிட்ட சில தமிழ்த் திரைப்படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.

புகழ்பெற்ற இந்தி பாடகர் கிஷோர் குமார் பப்பி லஹரியின் தாய்மாமா ஆவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!