‘அகிலன்’: நிழல் உலக ரவுடிகளின் கதை

முழு நீள அடி­த­டிப் பட­மாக உரு­வாகி வரு­கிறது ஜெயம் ரவி­யின் 'அகி­லன்'.

கல்­யாண கிருஷ்­ணன் இயக்­கு­கி­றார். 'பூலோ­கம்' படத்­தின் மூலம் தமிழ் சினிமா ரசி­கர்­களை திரும்­பிப் பார்க்க வைத்­த­வர். காலஞ்­சென்ற இயக்­கு­நர் ஜன­நா­த­னி­டம் உத­வி­யா­ள­ராக இருந்து தொழில் கற்­ற­வர்.

"இது நிழல் உலக ரவு­டிக் கூட்­டத்­தைப் பற்­றிய கதை. அந்­தக் குழு­வில் ஒரு­வ­ராக, அகி­லன் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார் ஜெயம் ரவி.

"நிழல் உலக ரவுடி­கள் இப்­ப­டித்­தான் இருப்­பார்­கள் என நாம் கற்­பனை செய்­தி­ருப்­போம். ஆனால் உண்மை அது­வல்ல. அவர்­கள் ஓர் அர­சாங்­கம் போன்று செயல்­ப­டக்­கூ­டி­ய­வர்­கள். ஒரு­வரின் பயம்­தான் இந்த ரவு­டி­க­ளின் பலம்.

"இப்­போ­தெல்லாம் பணத்­துக்­காக கொலை செய்­வதை பெரிய சாதனை என்று சிலர் கரு­து­கி­றார்­கள். அதே­ச­ம­யம் இந்த நிழல் உலக ரவு­டி­க­ளி­டம் உள்ள நாக­ரி­கம், ஒழுக்­கம், விசு­வா­சம், அறி­வாற்­றல் ஆகி­ய­வற்­றைக் கேள்­விப்­படும்­போது வியப்­பாக இருக்­கிறது.

"பேராண்மை' படத்­தில் தொடங்கி இப்­போது அவ­ரு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­கி­றேன். மிக அரு­மை­யான மனி­தர். என்னை நம்பி மிகப்­பெ­ரிய பொறுப்பை ஒப்­ப­டைத்­துள்­ளார். 'பூலோ­கம்' படம் வெற்றி பெற்­றா­லும்­கூட எனக்­கான வாய்ப்­பு­கள் அமை­ய­வில்லை. எந்­தத் தயா­ரிப்­பா­ள­ரும் என்­னைத் தேடி­வ­ர­வில்லை. ஆனால் ஜெயம் ரவி என்னை மீண்­டும் நம்­பி­யது அவ­ரு­டைய பெருந்­தன்மை.

"இந்­தப் படத்­தில் பல ஆபத்­தான காட்­சி­கள் இடம்­பெற்­றுள்­ளன. கப்­பல் மீது ஏறவேண்­டும், கொள்­க­லன்­கள் மீது வேக­மாக ஓட வேண்­டும், கிரேன்­கள் மீது விறு­வி­று­வென ஏறிச்சென்று எதி­ரி­யு­டன் மோத வேண்­டும், பல அடி உய­ரத்­தில் இருந்து கீழே குதிக்கவேண்­டும் என வரி­சை­யாக அடுக்­கிக்கொண்டே போக­லாம்.

"ஆனால் ஜெயம் ரவி அனைத்­தி­லும் தயக்­கம் இன்றி துணிச்­ச­லு­டன் நடித்­தார்.

"அகில் கதா­பாத்­தி­ரத்­து­டன் அவர் நூறு விழுக்­காடு பொருந்­திப் போனார். கதைப்­படி, தனது உண்­மை­யான உணர்ச்சி­களை வெளிக்­காட்­டா­த­வன் அகி­லன். அவன் தன் மன­துக்­குள் என்ன நினைக்கி­றான் என்­பது யாருக்­குமே தெரி­யாது.

"அவ­னது அழுகை, சிரிப்பு, கோபம் எல்­லாமே பொய். அவன் யாருக்­காக அனைத்­தை­யும் செய்­கி­றான், யாருக்கு உண்­மை­யாக இருக்­கி­றான் என்­ப­து­தான் கதை­யின் மையம்," என்­கி­றார் இயக்­கு­நர் கல்­யாண கிருஷ்­ணன்.

'அகி­லன்' படத்­தின் முதன்மை நாயகி பிரியா பவானி சங்­கர். தன்யா ரவிச்­சந்தி­ரன் மற்­றொரு நாயகி. பிரியா பவானி சங்­கர் காவல்­துறை அதி­கா­ரி­யாக நடித்­துள்­ளார். படத்தை நகர்த்­திச் சொல்­லும் கதா­பாத்­தி­ர­மாம்.

"குறிப்­பிட்ட ஒரு காட்­சி­யில் புல்­லட் ஓட்டவேண்­டும் என்று அவ­ரி­டம் சொல்லி இருந்­தேன். அடுத்த சில தினங்­க­ளி­லேயே படப்­பி­டிப்­புக்­குப் புல்­லட்­டில் வந்து இறங்கி அசத்­தி­னார்.

"தன்­யா­வும் தனது பங்­க­ளிப்பை கச்சி­த­மாக வழங்கி உள்­ளார். அவர் ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரம் தனித்­து­வ­மா­னது. அந்த வேடத்­தில் வேறு யாரா­வது இந்­த­ளவு சிறப்­பாக நடித்­தி­ருக்க முடி­யுமா என்ற சந்­தே­கம் இப்­போ­தும் உள்­ளது. அவர் மிகுந்த திற­மை­சாலி.

"இந்­தப் படத்­தில் ஐந்து வில்­லன்­கள் உள்­ள­னர். ஹரிஷ் உத்­த­மன், ஹரிஸ் பெராடி, சிராக் ஜானி, தமிழ் ஆகி­யோர் நிழல் உல­கத்­துக்கு தங்­கள் நடிப்­பால் உயிர் கொடுத்­துள்­ள­னர்.

"படத்­தின் பெரும்­பா­லான காட்­சி­கள் துறை­மு­கப் பகு­தி­க­ளில்­தான் பட­மாக்­கப்­பட்­டுள்­ளன. நான் ஒரு பக்­கம், என் உதவி­யா­ளர்­கள் இன்­னொரு பக்­கம், நடி­கர்­கள் வேறொரு பக்­கம் என்று அனை­வ­ரும் தனித்­த­னி­யாக நின்று உழைத்­தோம்.

"மிக­வும் சிர­மப்­பட்டு எடுத்த காட்­சி­கள் ரசி­கர்­க­ளின் கைத்­தட்­டலை பெறும் என உறு­தி­யாக நம்­பு­கி­றோம். ஜெயம் ரவி என் மீது வைத்துள்ள நம்பிக்கை சரியானது என்பதை நிரூபிக்கவும் இந்த நம்பிக்கையை நீட்டிக்கவும் ரசிகர்களின் கைத்தட்டல்கள் மிக அவசியம்," என்­கிறார் கல்­யாண கிருஷ்­ணன்.

ஜெயம் ரவி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!