சசிகுமாரின் புதுப் படத்துக்கு பூசை போடப்பட்டது

சசிகுமாரின் புதுப் படத்துக்கு பூசை போடப்பட்டது

1 mins read

நடிகர் சசிகுமார் அடுத்து பா.சரவணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத் துக்கு நேற்று முன்தினம் பூசை போடப்பட்டது.

நாயகி யார் என்பது இன்னும் தெரியாத நிலையில், அனன்யா, கருணாஸ், அபிராமி, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்க உள்ளனர்.

தற்போது 'காமன் மேன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார்.

அதில் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் அவர் புதுப்படத்தில் தோன்றுவார் எனத் தெரிகிறது.