சொந்த படம் தயாரித்து அதில் தாமே நாயகியாக நடிக்கிறார் மேகா ஆகாஷ். அபிமன்யு இயக்கும் இந்தப் படம், நாயகியை மையப்படுத்தி உருவாகிறது. மேகாவுடன் நடிக்கப் போகும் மற்ற நடிகர், நடிகையர் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளனர்.
இதற்கிடையே, இந்தப் படத்தின் சுவரொட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில், மேகா தன் கையில் சிகரெட்டை வைத்திருக்க, அவரது வாயில் இருந்து புகை வருவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.
இதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 'பட விளம்பரத்துக்காக இப்படிச் செய்யலாமா?' என்றும் கேட்டுள்ளனர். சுவரொட்டியைப் பதிவிட்ட மேகா, 'மோசமான காதல் கதையைக் கேட்கத் தயாராக இருங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

