திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
33b85f37-9858-4b51-9449-7b3e50e32722
-
multi-img1 of 3

 நடிகர் விஜய் அடுத்து காதல் கதையில் நடிக்க வேண்டும் என நடிகை மாளவிகா மோகனன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

விஜய்யை முழுநீள காதல் படத்தில் பார்த்து நீண்ட நாள்களாகிவிட்டதாகவும் அவரது ரசிகர்களின் விருப்பமும் இதுதான் என்றும் மாளவிகா கூறியுள்ளார்.

"நிறைய அதிரடிப் படங்களில் விஜய்யைப் பார்த்துவிட்டோம். எனவே, அவர் அடுத்து ஒரு காதல் கதையில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதுமட்டுமல்ல, அந்தப் படத்தில் நானும் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசையாக உள்ளது," என்று அண்மையில் ரசிகர்களுடனான கலந்துரையாடலின்போது மாளவிகா குறிப்பிட்டார்.

தனுஷுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து மற்றொரு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, "தனுஷ் ஒரு நல்ல வழிகாட்டி. நடிப்பு தொடர்பான பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்," என்றார் மாளவிகா.

 இளையராஜா இசை அமைக்கும் 1,422வது படத்தை பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது ஓர் ஆங்கிலப் படமாகும். 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்' என்று தலைப்பு வைத்துள்ளனர். திகில், காதல், நகைச்சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் உருவாகிறது. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து இந்தியாவுக்கு வரும் இளம் காதலர்கள் சில நாள்கள் சேர்ந்து வாழ்ந்த பிறகு திடீரென பிரிந்துவிட முடிவு செய்கின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் வீட்டில் உள்ள பேய்களால் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதையடுத்து, அவர்கள் இருவரும் இணைந்து வாழ்கிறார்களா அல்லது பிரிவது என்ற முடிவில் உறுதியாக நிற்கிறார்களா என்பதுதான் கதையாம். இப்படத்தை அஜித் வாசன் இயக்குகிறார்.

 'பீஸ்ட்' படத்தில் இடம்பெறும் 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடி, அந்தக் காணொளியை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. தன்னைப் போலவே ரசிகர்களும் இந்தப் பாடலுக்கு நடனமாடி காணொளிகளை அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதை ஏற்று ஏராளமான ரசிகர்கள் காணொளிகளை அனுப்பி உள்ளனராம். அதற்காக நன்றி தெரிவித்துள்ள அவர், ரசிகர்களின் இந்த முயற்சியை தாம் மிகவும் நேசிப்பதாகவும் பதிலுக்கு அனைவருக்கும் தனது அன்பை பகிர்வதாகவும் கூறியுள்ளார் பூஜா. 'அரபிக்குத்து' பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு தம்மை பிரமிக்க வைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 தன் பெயரைப் பயன் படுத்தி சிலர் மோசடி வேலைகளைச் செய்து வருவதாக 'வீரமே வாகை சூடும்' பட நாயகி டிம்பிள் ஹயாதி கூறியுள்ளார். குறிப்பிட்ட கைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு, தன் பெயரைச் சொல்லி உதவி கேட்பவர்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"என் பெயரைக் குறிப்பிட்டு சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்துள் ளது. குறிப்பிட்ட கைபேசி எண்ணை 'புளோக்' செய்து விடுங்கள். மேலும், காவல்துறையிலும் புகார் செய்யுங்கள்," என்று டிம்பிள் ஹயாதி கூறியுள்ளார்.

, :   